வாரிசு படம் தொடங்கியதில் இருந்தே விஜய்யை நாலா பக்கமும் சுத்தி பிரச்சனை விரட்டி கொண்டிருக்கிறது. இப்போது வாரிசு படத்தில் ஆடியோ லான்ச் பங்க்ஷன் நடக்குமா என்ற நிலைமை வந்துள்ளது. அதாவது வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
இப்போதே படத்திற்கான பிரமோஷன் வேலைகள் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் நாளை ஆடியோ லான்ச் பங்க்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக பல கோடி செலவு செய்த நிலையில் தற்போது பெரும் சிக்கலில் வாரிசு படக்குழு மாட்டிக்கொண்டிருக்கிறது.
Also Read : வாரிசு மேடையில் விஜய் விலாசப் போகும் 5 சம்பவங்கள்.. குட்டி ஸ்டோரி யாருக்குத் தெரியுமா?
வாரிசு ஆடியோ லான்ச் பங்க்ஷன்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகேஷ் பாபு, ஷாருக்கான் போன்ற பிரபலங்களும் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இப்போது கோவிட் தொற்று ஆரம்பித்துள்ளது. இதனால் பொது இடங்களில் மாஸ்க் அணிந்து செல்லும்படி தமிழக அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு இருக்கையில் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிறைய பேர் கூடுவதற்கான தடை போட்டால் வாரிசு படத்தின் ஆடியோ பங்க்ஷன் நடப்பதில் சிக்கல் ஏற்படும்.
Also Read : பிரம்மாண்டமாக நடக்க உள்ள வாரிசு ஆடியோ லான்ச்.. டிக்கெட் விலையை கேட்டா சும்மா தல சுத்துது
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வாரிசு படக்குழுவினர் முழித்து வருகிறார்கள். ஏற்கனவே இதே பிரச்சனை தான் விஜயின் பீஸ்ட் படத்திற்கும் வந்தது. அதுமட்டுமின்றி வாரிசு தொடங்கியதில் இருந்தே பிரச்சனை இருந்து வந்த நிலையில் இப்படம் ரிலீஸ் ஆகுமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
இப்போதுதான் எல்லா பிரச்சனையும் முடிந்து பொங்கலுக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ள நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கோவிட் தொற்று தலை தூக்கி உள்ளதால் புதிய பிரச்சினையை வாரிசு படம் சந்திக்க விருக்கிறது. இதை சமாளித்து வாரிசு படக்குழு இசை வெளியீட்டு விழாவை திறம்பட செய்யும் என எதிர்பார்க்கலாம்.
Also Read : விஜய்க்கு வாரிசு படத்தில் பிடித்த 3 விஷயம்.. பார்த்து பார்த்து செதுக்கிய வம்சி