Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ரஜினி கூட்டணியில் ஷாருக்கானா? பெரிய உருட்டா இருக்கே!

ரஜினி கூட்டணியில் ஷாருக்கானா? பெரிய உருட்டா இருக்கே!

Rajinikanth : வயசானாலும் இன்னும் மவுசு குறையாமல், பல படங்களில் ஹீரோவாக மட்டும் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த். அதிரடியான காட்சிகள்: தலைவர் 169 என்ற பெயரில் வெளியிடப்பட்ட ஜெயிலர் திரைப்படம் திரையில் வெளியாகி நல்ல விமர்சனங்களை […]

Rajinikanth : வயசானாலும் இன்னும் மவுசு குறையாமல், பல படங்களில் ஹீரோவாக மட்டும் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

அதிரடியான காட்சிகள்:

தலைவர் 169 என்ற பெயரில் வெளியிடப்பட்ட ஜெயிலர் திரைப்படம் திரையில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. படத்தின் காட்சிகளை விட ரஜினிக்கு பின்னால் இசையை போட்டு தட்டி தூக்கிருப்பார் அனிருத். முக்கியமாக மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் இவர்கள் என்ட்ரி கொடுக்கும் சிறு காட்சிகளுக்கே ரசிகர்களின் கைதட்டல் அதிகம்.

அடுத்த ஆட்டம் ரெடி!

2023-ல் வெளியான ‘ஜெயிலர்‘ படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து ஜெயிலர்-2 படத்திற்கான வேலைகளை ஜனவரி மாதமே ஆரம்பித்த படக்குழு இப்போது ரஜினியின் மாஸ் நடிப்பில் ஜெயிலர்-2ஐ விரைவில் வெளியிடப் திட்டமிட்டிருக்கிறது.

ஷாருக்கான் இணையும் வாய்ப்பு?

நெல்சன் இயக்கத்தில் உருவாகும், ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கப்போகிறார் என்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவியது. ஆனால், தற்போது அந்த செய்தி உண்மையல்ல என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து ஜெயிலர் பாகம் ஒன்றில் மாஸாக களமிறங்கிய மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் இப்படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கின்றனர்.

இருந்தபோதிலும் ரஜினியுடன் ஷாருக்கான் இணைந்து நடித்தால் படம் இன்னும் களைகட்டும் என ரஜினியின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

ஜெயிலர் படத்தில் ரஜினியின் ஸ்டைலிஷான நடை, டயலாக் டெலிவரி, மற்றும் கண்ணாடி பளபளக்கும் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோன்று ஜெயிலர் 2 படத்திலும் அவரது யானை நடை, மாஸ் லுக், மற்றும் பஞ்ச் டயலாக்கள் மீண்டும் திரைக்கு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்த போகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.