வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அக்கட தேசத்து ஹீரோவுடன் கூட்டணி போடும் வெற்றிமாறன்.. பாலாவை போல் சூர்யாவை கழட்டிவிட்ட சோகம்

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, சூர்யாயை ஹீரோவாக்கி விடுதலை என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலமாக முதல் முதலாக நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகமாக இந்த படத்தை குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்ட விடுதலை படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததை தொடர்ந்து படத்தின் ப்ரோமோக்சன் வேலைகள் படுச்சோராக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்குனர் என எதிர்பார்க்கப்பட்டது.

Also Read: விஜய் சேதுபதி அதிக படங்களில் நடிப்பதற்கான முக்கிய காரணம் இதுதான்.. இவரைப் போய் தப்பா நினைச்சுட்டோமே!

ஆனால் இப்போது வெற்றி இயக்குனராக பார்க்கப்படும் வெற்றிமாறன் அக்கட தேசத்தை நடிகரின் படத்தை இயக்குவதற்கு கமிட்டாகி இருக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் ஜூனியர் என்டிஆர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கொரட்டலா சிவா மற்றும் கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோருடன் புதிய படத்தில் நடிப்பதாகவும் சமீபத்திய தகவல் வெளியானது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

Also Read: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் சூர்யா.. சுதா கொங்கரா படத்திற்கு முன் போடும் மாஸ்டர் பிளான்

இதற்காக சமீபத்தில் வெற்றிமாறன் ஜூனியர் என்டிஆர் நேரில் சந்தித்து கதை கூறியதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்துப் போனதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்குவதற்கு தயாராகாமல் வெற்றிமாறன் ஜூனியர் என்டிஆர் படத்திற்கு கதை சொன்னது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப் படத்தை வெற்றிமாறன் இரண்டு பாகங்களாக எடுக்க முடிவில் இருக்கிறார். முதல் பாகத்தில் ஜூனியர் என்டிஆர் லீட் ரோலில் நடிக்க உள்ளார் இரண்டாம் பாகத்தில் தனுஷ் லீட் ரோலில் நடிக்கிறார். முதலில் வாடிவாசல் படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகளை முடித்துவிட்டு வெற்றிமாறன் ஜூனியர் என்டிஆர் கையில் எடுக்க திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யாவின் வணங்கான் படம் ட்ராப் ஆனதைத் தொடர்ந்து வாடிவாசலுக்கும் அந்த நிலைமை வந்து விடுமோ என்றும் சூர்யா தற்போது சோகத்தில் இருக்கிறார். மேலும் சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்த கையோடு வாடிவாசல் படத்தில் இணையலாம் என திட்டமிட்ட நிலையில், வெற்றிமாறன் தெலுங்கு பக்கம் கிளம்பியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: மொத்தமாக சுத்தலில் விட்ட லோகேஷின் LCU.. போதை, தங்க கடத்தல் ரோலக்ஸ்-க்கு தண்ணி காட்ட வரும் லியோ

Trending News