புதன்கிழமை, ஜனவரி 15, 2025

துருவ நட்சத்திரம் போல் முடங்குமா தங்கலான்.? பா ரஞ்சித்தால் விக்ரமுக்கு ஏற்பட்ட தலைவலி

Vikram : விக்ரம் ஒரு ஹிட் கொடுப்பதற்காக கடந்த சில வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கும் படம் தான் தங்கலான்.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி போன்ற பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் சில காரணங்களினால் படப்பிடிப்பு தாமதம் ஆன நிலையில் இந்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆனால் துருவ நட்சத்திரம் படம் போல் தங்கலான் படமும் முடங்குமா என்ற எண்ணம் இப்போது ஏற்பட்டு இருக்கிறது.

பா ரஞ்சித்துக்கு எதிராக போற்கொடி தூக்கிய ரஜினி ரசிகர்கள்

அதாவது சமீபத்தில் பா ரஞ்சித் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ரஜினியை வைத்தே கபாலி மற்றும் காலா படங்களில் தலித் அரசியலை பேசி உள்ளீர்கள் என நக்கலாக சொல்லப்பட்ட நிலையில் ரஞ்சித்தும் அதற்கு சிரித்து இருந்தார்.

சினிமாவில் ரஞ்சித்துக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினியையே இப்படி அவமதித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பா ரஞ்சித்துக்கு எதிராக நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து தருகிறார்கள்.

ஆகையால் ரஞ்சித்தின் படம் இப்போது வெளியானால் அதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவும். விக்ரமின் துருவ நட்சத்திர படம் பல போராட்டங்களுக்குப் பின் வருகின்ற 24ஆம் தேதி தான் வெளியாகிறது.

இப்போது பா ரஞ்சித்தால் தங்கலான் படம் ரிலீஸாகும் என தலைவலியில் உள்ளார் விக்ரம். மேலும் ரஞ்சித் நேரடியாக இதுகுறித்து ஊடகங்களில் பேட்டி கொடுத்தால் தான் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

Trending News