சினிமாவை பொருத்தவரை ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனால் தான் அது ரசிகர்களிடம் வரவேற்பை பெறும். அந்த வகையில் தத்ரூபமாக நடித்து ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகளாக இருப்பவர்கள் அடுத்தடுத்த திரைப்படங்களிலும் ஜோடி போட்டு நடிப்பார்கள்.
அது நாளடைவில் நிஜ வாழ்விலும் ஒரு கெமிஸ்ட்ரியை ஏற்படுத்தி விடும். அப்படி சினிமாவில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி நிஜ வாழ்விலும் காதலர்களாக மாறிய ஒரு ஜோடியை பற்றி தான் தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டிருப்பவர் தான் அந்த இளம் நடிகர்.
Also read : திருமணமான நடிகரை வளைக்க முயன்ற நடிகை.. மாஸ் நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டதால் வந்த வினை
தற்போது விவாகரத்து நடிகையுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் வெளிவந்த படத்தின் தோல்வியால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். அதனாலேயே தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்திலிருந்து ஒரு சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு தன் காதலியுடன் மாலத்தீவுக்கு பறந்து விட்டார்.
தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் அந்த நடிகை இளம் நடிகரின் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்ததன் மூலம் காதல் கிசுகிசுவில் சிக்கினார். இவர்கள் காதலிப்பது அப்பட்டமாக தெரிந்தாலும் நாங்கள் வெறும் நண்பர்கள் தான் என்று ஒரு கதையை கட்டி உல்லாசமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறது இந்த ஜோடி.
Also read : 5 வருட லிவிங் டுகெதர், மதமாற்றம்.. புது நடிகையின் மோகத்தால் புளித்துப்போன கர்ப்பிணி மனைவி
தன் காதலர் பெயரில் பாதியை வைத்திருக்கும் அந்த மாஸ் நடிகர் உடன் அந்த நடிகை நடித்துக் கொண்டிருக்கிறார். இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது அவர் தன் காதலருடன் வெளிநாட்டில் விடுமுறையை என்ஜாய் செய்து கொண்டிருக்கிறாராம். யாருக்கும் தெரியாமல் படு ரகசியமாக விமானத்தில் இந்த ஜோடி பறந்திருக்கிறது. ஆனாலும் அவர்களின் போட்டோக்கள் அனைத்தும் தற்போது மீடியாவில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
இதைப் பார்த்த தயாரிப்பாளர் தான் தற்போது நொந்து போய் இருக்கிறார். படத்தின் சூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் நடிகர் இப்படி காதலியுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பது தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாம். எப்படியாவது படத்தை முடிக்க வேண்டும் என்று அவர் நடிகரின் வரவை எதிர்பார்த்து பதட்டத்திலேயே இருக்கிறாராம்.
Also read : நகைகளை கொடுத்து நடிகையை கரெக்ட் செய்த தொழிலதிபர்.. அம்பலமான குடும்ப குத்துவிளக்கின் ரகசியம்