திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஐட்டம் டான்சருக்கு முழு கதையும் சொன்ன தயாரிப்பாளர்.. கோபப்பட்ட விஜயகாந்திற்கு அடித்த லக்

எந்த ஒரு கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதை சிறப்புற நடித்துக் கொடுப்பதில் வல்லவர் விஜயகாந்த். அவ்வாறு இருக்க படப்பிடிப்பில் இவரை எரிச்சல் ஊட்டக்கூடிய விஷயமாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கடமை தவறாது சிறப்புற நடித்திருப்பார்.

Also Read: சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டார் போல.. கோவிலுக்குள் முத்தம், ஆதிபுருஷால் வெடிக்கும் சர்ச்சை

இப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் விஜயகாந்தை அப்பட தயாரிப்பாளரான இப்ராஹிம் ரௌதர் எரிச்சல் பட செய்திருக்கிறார். பொதுவாக படத்தில் முக்கிய கதாபாத்திரமான ஹீரோ, ஹீரோயின்களுக்கு தான் கதை சொல்லி பார்த்திருப்போம். ஆனால் அதற்கு எதிர்மறையாக இப்படத்தில் ஐட்டம் டான்சராக இடம் பெற்ற ரம்யா கிருஷ்ணனுக்கு தயாரிப்பாளர் முழு கதையும் சொன்னாராம்.

படத்தின் ஒரு பாட்டு இருக்கு நடனம் ஆடுவதற்கு படக்கதை அவசியமே இல்லை என்ற நிலையில் இவரின் இத்தகைய செயல் ஹீரோவான விஜயகாந்தை மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கியது. மேலும் இப்படத்தில் ஐட்டம் டான்ஸ் மட்டும் ஆட மாட்டேன் என மறுத்த ரம்யா கிருஷ்ணனுக்கு முக்கிய கதாபாத்திரமும் கொடுத்தாராம்.

Also Read: வாத்தி கம்மிங் விட அட்டகாசமாக ரெடி ஆகிய லியோ பாடல்.. விஜய், அனிருத்துடன் இணைந்த கோளாறான பிரபலம்

இத்தகைய நிகழ்வுகளை கொண்ட இப்படத்தை, விஜயகாந்த் அவர்களுக்கு இன்று வரை மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது. ஆனால் அப்படத்தில் ஆட்டமா தேரோட்டமா என்னும் பாடலில் ரம்யா கிருஷ்ணனின் நடனம் பெரிதளவு பேசப்பட்டது.

இன்று வரை பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் இவரின் இத்தகைய பாடலும், ஆடலும் அடுத்தக்கட்ட பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. தற்பொழுது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகள் பட்டியலில் இவரும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாக்கியா வீட்டிற்கு பொண்ணு பார்க்க வரும் பழனிச்சாமி.. கூலும் குடிக்கணும் மீசையில் மண்ணு ஓட்டக்கூடாது எப்படி கோபி சார்

Trending News