சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சில்க் கடித்த ஆப்பிளுக்கு இவ்வளவு மவுசா.. ஏலத்தில் விட்டு பைசா பார்த்த தயாரிப்பாளர்

சில்க் ஸ்மிதா தற்போதும் ரசிகர்கள் மனதில் அதே இளமையான தோற்றத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதே அவருடைய தற்கொலை செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த காலத்தில் ரஜினி, கமலுக்கு இணையான ரசிகர்களை சில்க் ஸ்மிதா பெற்றிருந்தார்.

அப்போது படத்தில் ஒரு பாடலில் சில்க் ஸ்மிதா நடனமாடி இருந்தாலும் டைட்டில் போஸ்டரில் சில்க் ஸ்மிதாவின் புகைப்படம் இடம் பெறும். அவரது போட்டோ இடம்பெற்றாலே படம் சூப்பர் டூப்பர் ஹிட். இவ்வாறு சினிமாவில் கொடிகட்டி பறந்த சில்க் சுமிதாவின் வாழ்க்கையில் மர்மங்கள் நிறைந்துள்ளது.

Also Read : 80-களில் சில்க் சுமிதாவிற்கு அங்கீகாரம் கொடுத்த ஹிட் படங்கள்.. கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.!

இந்நிலையில் ஒருமுறை சில்க் ஸ்மிதா சூட்டிங் ஸ்பாட்டில் ஆப்பிள் சாப்பிட்டுள்ளார். அவர் கடித்துப் போட்ட பாதி ஆப்பிளை எடுக்க ரசிகர்கள் முண்டியடித்து உள்ளனர், இதனால் தயாரிப்பாளர் அந்த ஆப்பிளை ஏலம் விட்டுள்ளார். ஒரு ரசிகர் 300 ரூபாய் கொடுத்து அந்த ஆப்பிளை வாங்கி உள்ளாராம்.

அப்போது இரண்டு ரூபாய் கூட போகாத அந்த ஆப்பிள் சில்க் கடித்ததால் 300 ரூபாய்க்கு போயுள்ளது. அவ்வாறு அந்த காலத்தில் சிலுக்கு மவுஸ் அதிகமாக இருந்துள்ளது. அதன்பின்பு சில்க்கின் வரலாற்று படம் கன்னட மொழியில் தி டர்ட்டி பிக்சர் என எடுக்கப்பட்டது. இப்படத்தில் வீணா மாலிக் நடித்திருந்தார்.

Also Read : சில்க் ஸ்மிதாவின் இளகிய மனசு.. பிரபலம் வெளியிட்ட சீக்ரெட் சம்பவம்.!

இந்த படத்தில் அந்த ஆப்பிள் காட்சியை வைக்க வேண்டும் என அந்த நடிகை அடம் பிடித்தாராம். அதேபோல் இப்படத்தின் விளம்பரப் போட்டோவில் வீணா மாலிக் ஒரு ஆப்பிளை கடிப்பது போல் போஸ் கொடுத்திருந்தார். அப்போது அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவியது.

இவ்வாறு சில்க்கின் திரைவாழ்க்கை சில காலம் என்றாலும் பல தலைமுறைகள் கடந்தும் அவரது திறமையும், அழகையும் பெருமை பேசி வருகிறார்கள். தற்போதும் ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் சில்க்.

Also Read : சில்க் ஸ்மிதாவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியது யார் தெரியுமா.? அஞ்சாநெஞ்சன் பயில்வான் பேட்டி!

Trending News