திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

கேவலமான செயலுக்கு உடந்தையாக இருக்கும் வெற்றிமாறன்.. போன உயிர் போயிடுச்சு, துரதிஷ்டமானா இரங்கல் அறிக்கை

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் தோல்வியை பார்க்காத ஒரு இயக்குனர் வெற்றிமாறன். அவர் படங்களுக்கு என்று ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நேர்த்தியாக தத்ரூபமாக எடுக்கப்பட்டவையாக இருக்கும். இப்போது இவரது படம் வெளிவரும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள் ரசிகர்கள்.

தற்போது இவரது நெடுங்காலமாக படப்பிடிப்பில் இருக்கும் விடுதலை திரைப்படம் சூரியை கதையின் நாயகனாக வைத்து சாதாரணமாக துவங்கப்பட்ட படம் விடுதலை. அதில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொன்னதும் அந்தப்படத்தின் மதிப்பு வேறுமாதிரியாக மாறி அது விஜய்சேதுபதியின் படமாக மாறியது.

Also Read : பணத்துக்காக நல்ல பெயரை கெடுத்துக் கொண்ட வெற்றிமாறன்.. மக்களை ஏமாற்ற இப்படி ஒரு நாடகமா?

எப்போது முடியும் இந்த விடுதலை திரைப்படம் என்று நினைத்த நிலையில் கடந்த மாதம் முடிந்தது என்று அறிவிப்பு வெளிவந்தது. திடீரென வெற்றிமாறன் இந்த படத்தின் சில காட்சிகள் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்று 20 நாட்கள் சூட்டிங் எடுக்க வேண்டும் என்று சூரியிடம் சொல்லி மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினார்.

அந்த படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் கயிறு அறுந்து விழுந்ததால் இறந்துவிட்டார் என்ற செய்தி திடீரென பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது பின் இறுதி சடங்குகளை செய்து முடித்தனர். இதில் இறந்த சுரேஷ்விற்கு பண உதவிகள் கிடைக்க வேண்டும் என குரல்கள் எழுந்தன.

Also Read : போலீசை தாக்கும்படியான படங்கள் எடுப்பது ஏன்?. உண்மையை கூறிய வெற்றிமாறன்

தற்போது தயாரிப்பு நிறுவனம் அவர் இறந்தது துரதிஷ்டமானது படப்பிடிப்புத் தளத்தில் முன்னேற்பாடுகள் இருந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இது எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது அவன் நினைவாகவே இருக்கிறது. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என தயாரிப்பு நிறுவனம் கூறியிருக்கிறது.

இந்த பதிலை யாரும் எதிர்பார்க்காத நிலையில் தயாரிப்பு நிறுவனத்தை கேவலமாக திட்டி வருகின்றனர். முக்கியமாக தயாரிப்பு நிறுவனத்தை கேள்வி கேட்காது வெற்றிமாறனை இன்னும் மோசமாக திட்டி வருகின்றனர். படத்தில் மட்டுமே நல்லதே சொல்லும் இயக்குனர் தற்போது வாயை மூடி இருப்பது எதற்காக என்று கேட்டு வருகின்றனர். அவருக்கு இழப்பீடு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் இல்லையென்றால் விடமாட்டோம் என சினிமா அமைப்பினர் பேசி வருகின்றனர்.

Also Read : பிரபாகரனின் வாழ்க்கையை படமாக்கும் வெற்றிமாறன்.. தமிழினத்தின் தலைவனாக நடிக்க போகும் ஹீரோ!

Trending News