சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

5000 கோடியை இறக்கி பிரதீப்பை தட்டி தூக்கிய தயாரிப்பாளர்.. ஹீரோவாக சம்பளத்தை உயர்த்திய மாமா குட்டி

Pradeep Ranganathan: பிரதீப் ரங்கநாதன் எதார்த்தமான நடிப்பை கொடுக்கும் ஹீரோவாகும், இளசுகளுக்கு பிடித்த மாதிரி கதையை எடுக்கக்கூடிய இயக்குனராகவும் சினிமாவில் தனி இடத்தை பிடித்து விட்டார். கோமாளி படத்தை இயக்கி அறிமுகமாகிய பிரதீப், லவ் டுடே படத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் பிரபலமாகிவிட்டார்.

அத்துடன் இந்த இரண்டு படங்களுமே மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிகமான வசூலை வாரி குவித்ததால் தயாரிப்பாளருக்கு மிக ஃபேவரிட் ஆக மாறிவிட்டார். அதனால் இவருடைய மார்க்கெட் ரேட் அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.

இந்த சான்ஸை பயன்படுத்தி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றால் இவ்வளவு சம்பளம் வேண்டும் தயாரிப்பாளர்களிடம் கண்டிஷனாக சொல்லிவிட்டார். இதற்கிடையில் ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் நடிப்பதற்கு 20 கோடி சம்பளம் வேண்டுமென்று டிமாண்ட் பண்ணியதாக கூறப்பட்டது.

அதன் பின்னரே இந்த வாய்ப்பு பிரதீப்புக்கு கிடைக்காமல் போய்விட்டது. அடுத்ததாக லலித் குமாரின் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி(lic) என்ற படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, கீர்த்தி செட்டி, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில், அனிருத் இசையில் உருவாகி வருகிறது.

பிரதீப்புக்கு அடித்த ஜாக்பாட்

இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரதீப் அடுத்த படத்திற்கான முயற்சியில் இறங்கி விட்டார். அந்த வகையில் தெலுங்கு தயாரிப்பாளரான மைத்திரி மூவி மேக்கர்ஸ் கோலிவுட்டில் கிட்டத்தட்ட 5000 கோடியை இறக்கி வெற்றியை கொடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பத்து படங்களையாவது உருவாக்கி அதன் மூலம் வசூலை அள்ள வேண்டும் என்று இயக்குனர்களையும் நடிகர்களையும் சல்லடை போட்டுக்கொண்டு தேடி வருகிறார். அந்த வகையில் பிரதீப்புக்கு ஒரு படத்தை தயாரிக்கப் போகிறார்.

அதற்காக அவருடைய சம்பளம் 10 கோடி என்று முடிவாகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு 10 கோடி. ஒருவேளை இயக்குனராக இவரே கமிட்டாகி விட்டால் அதற்கான சம்பளமும் தனி என்று பேசப்பட்டு வருகிறது. இப்படி பிரதீப்புக்கு அடித்த ஜாக்பாட் மூலம் கோடியில் புரள ஆரம்பித்து விட்டார்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் லவ் டுடே படத்தின் மூலம் மாமா குட்டிக்கு கிடைத்த பேரும் புகழும் தான். இன்னும் இதையெல்லாம் வைத்துக் கொண்டு என்னென்ன ஆட்டம் ஆட போகிறாரோ, பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News