வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாரிசு படத்தை தயாரித்துவிட்டு அல்லல்பட்டு வரும் தயாரிப்பாளர்.. பேசாம வாய வச்சிட்டு சும்மா இருந்திருக்கலாம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் 3 போஸ்டர்கள், 3 பாடல்கள் என இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. புதுவருடம் பிறக்க போகுது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ வாரிசு படத்தை பார்க்க ஆர்வத்தில் உள்ளார்கள்.

ஏனென்றால் விஜய்யின் வாரிசு படத்தோடு அஜித்தின் துணிவு படமும் மோதவுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஜில்லா,வீரம் உள்ளிட்ட படங்கள் பொங்கலன்று ரிலீஸானது. அதன் பிறகு 8 வருடங்கள் கழித்து தல,தளபதி மோதல் உருவாகியுள்ளது. துணிவு படத்தை போனி கபூர் தயாரித்த நிலையில், உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் திரையரங்கு வினியோகஸ்தர் உரிமையை வாங்கி கிட்டத்தட்ட தமிழகத்தில் 70 சதவிகிதம் திரையரங்குகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

Also Read: விஜய்யை நாலாபக்கமும் சுத்தி அடிக்கும் பிரச்சனை.. வாரிசு ஆடியோ லான்ச் நடக்குமா?

இதன் காரணமாக வாரிசு படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சற்று சிக்கல் ஏற்பட்டது. இந்த சிக்கலை சமாளிக்க இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு பேட்டியில் அஜித்தை விட விஜய் தான் எப்போதும் நம்பர் ஒன் என தெரிவித்தார்.இவர் பேசிய பேட்டி வைரலான நிலையில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். தில் ராஜு பல தெலுங்குப் படங்களை தயாரித்து, அங்கு இவரது நிறுவனம் தான் நம்பர் ஒன் என்று சொல்லலாம்.

அப்படிப்பட்ட இயக்குனர் தமிழகத்தில் வந்து விஜயை புகழ்ந்து பேசியது தவறல்ல,ஆனால் அஜித்தை ஒப்பிட்டு பேசி தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கியது தான் பிரச்சனை. என்னதான் தில் ராஜு சர்ச்சையை கிளாப்பினாலும் வாரிசு படத்திற்கு திரையரங்கு கிடைத்த பாடில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் உதயநிதியிடம் கோரிக்கை விடுத்தார் தில் ராஜு.

Also Read: எது பேசினாலும் சர்ச்சையாகிறது.. நான் நிறைய சாதிக்கணும், வாரிசு படத்தால் நொந்து போன பிரபலம்

மேலும் இவரின் வேண்டுகோளுக்கு இணங்க வாரிசு படத்தை சென்னை,செங்கல்பட்டு,கோவை,ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் விநியோகம் செய்ய ஒப்புக்கொண்டது. அவ்வளவு பெரிய தயாரிப்பாளர் முன்னணி நடிகரின் படத்தை ரிலீஸ் செய்யவே கஷ்டப்பட்டது தான் இங்கு பேச்சாக மாறியுள்ளது.

இதுவே நடிகர் விஜயை அவர் தெலுங்கு மாநிலத்தில் சென்று நம்பர் ஒன் என்று சொன்னால், இவரது நிலை என்னவாகும், அவ்வளவு தான் அங்குள்ள ரசிகர்கள் போர் கொடித்தூக்கி பிரளயமே உருவாகியிருக்கும் . தமிழ்நாட்டில் விஜயை தலையில் தூக்கி ஆடியபோதே இவரது நிலை அந்தர்பல்டி ஆனது. இதையெல்லாம் சற்றுக்கூட யோசிக்காமல் தில் ராஜு பேசியுள்ளது தான் வேடிக்கையாக உள்ளது.

Also Read: வலிமையில் வாங்கிய அடியே போதும்.. தயாரிப்பாளரை அடக்க அஜித் போட்ட டீல்

Trending News