வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

திட்டம் போட்டு வலை விரித்த தயாரிப்பாளர்.. சரியான நேரம் பார்த்து எஸ்கேப் ஆன தனுஷ்

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர், வாத்தி திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தனுஷ் பைனான்சியர் அன்புச்செல்வன் தயாரிப்பில் நடிக்க இருந்த திரைப்படம் திடீரென நிறுத்தப்பட்டிருக்கிறது.

Also read:போட்டக் கணக்கு எல்லாம் தப்பா போன பரிதாபம்.. தனுஷ் படத்தால் அந்தர் பல்ட்டி அடித்த தியேட்டர்

அன்புச் செழியனிடம் சில குறிப்பிட்ட தொகை கடன் வாங்கி இருந்த தனுஷ் அதற்காக அவருடைய திரைப்படத்தில் நடிக்க சம்மதம் கூறியிருந்தார். அவருக்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும் வாங்கிய கடன் தொகைக்காக வேறு வழியில்லாமல் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார் என்ற செய்திகள் வெளிவந்தது.

இப்படி மறுக்க முடியாத சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட தனுஷ் எப்படியாவது இதிலிருந்து வெளிவருவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அது முடியாமல் போகவே தயாரிப்பாளர் அனுப்பும் இயக்குனர்களிடம் எல்லாம் கதை சரியில்லை, பிடிக்கவில்லை என்று ஏதோ ஒரு காரணத்தை கூறி தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்.

Also read:வசூல் மழையில் நனைந்த நானே வருவேன் தயாரிப்பாளர்.. மீண்டும் இணையும் தனுஷ்-செல்வராகவன் கூட்டணி

ஆனாலும் அசராத தயாரிப்பாளர் பல இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு தனுஷிற்கு அனுப்பி கொண்டே இருந்தார். இப்படி நாட்கள் கடந்த நிலையில் திடீரென பைனான்சியரின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது. இது ஒட்டுமொத்த திரையுலகயும் பரபரப்பாகியது.

தற்போது அந்தப் பிரச்சினை எல்லாம் ஓய்ந்த நிலையில் தயாரிப்பாளர் இப்பொழுது படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை, சில காலம் செல்லட்டும் என்று தனுஷிடம் கூறிவிட்டாராம். இப்படி ஒரு வாய்ப்பை எதிர்பார்த்த தனுஷும் தற்போது தயாரிப்பாளரின் வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆகி இருக்கிறார்.

Also read:நானே வருவேன் படத்தில் அசத்திய தனுஷ்.. சீனியர் நடிகருக்கே டஃப் கொடுத்த சம்பவம்

Trending News