Dhanush: தனுஷ் நடிப்பில் இட்லி கடை, குபேரா என அடுத்தடுத்த படங்கள் வெளிவர காத்திருக்கிறது. அதேபோல் புதுப்புது படங்களிலும் கமிட் ஆகி வருகிறார்.

இந்த சூழலில் பிரபல தயாரிப்பாளர் தனுஷ் அட்வான்ஸ் பணம் வாங்கிக் கொண்டு கால்ஷீட் தரவில்லை என குமுறியுள்ளார். அது தொடர்பான அறிக்கை அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவன பங்குதாரர் கலைச்செல்வி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் திரு ஆர் கே செல்வமணி அவர்களுக்கு, கடந்த வருடம் செப்டம்பர் 6ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்து கொண்டேன்.
கால்ஷீட் தராத தனுஷ்
அப்பொழுது தனுஷ் கால்சீட் தராதது தொடர்பான என்னுடைய மனவேதனையை தெரியப்படுத்தினேன். அப்போது நீங்கள் இட்லி கடை பட சூட்டிங் நடக்க வேண்டும். மேலிடத்து உத்தரவு என கூறியதை மறந்து விட்டீர்களா?
அக்டோபர் 30ஆம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என்று சொன்னீர்கள். நாங்கள் ஏற்கனவே தனுசை வைத்து பொல்லாதவன் ஆடுகளம் ஆகிய படங்களை தயாரித்துள்ளோம்.
இது போன்ற சங்கங்கள் நீதி வழங்குவதற்காக தான். வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் வலியை எப்போது உணர்வீர்கள்.
அரசியல் குறுக்கீடு இல்லாமல் இந்த விஷயத்தில் நியாயமான முடிவை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் மேலும் ஆர்கே செல்வமணி பத்திரிக்கையாளர்களிடம் இது குறித்து கூற வேண்டாம் என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி தற்போது தயாரிப்பாளர் கதிரேசன் இந்த விஷயத்தில் பிரச்சனை செய்கிறார் என்று எப்படி உங்களால் கூற முடிகிறது.
எங்களின் வலியை உணர்ந்து இந்த விஷயத்தில் நியாயம் பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து தற்போது யார் அந்த மேலிடம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது.