செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

தனுஷை கழட்டிவிட்ட தயாரிப்பு நிறுவனம்.. கஜானா காலி ஆகிவிடுமோ என்ற பயத்தில் எடுத்த முடிவு

தனுஷின் படத்தை தயாரிக்க ஒரு காலகட்டத்தில் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருந்தது. ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருவதால் தனுஷின் படத்தை தயாரிக்க எந்த முன்னணி நிறுவனங்களும் முன் வருவதில்லை.

மேலும் தனுஷ் ஹிட் படங்கள் கொடுத்து வந்த போது பிரபல நிறுவனம் ஒன்று அவரிடம் மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்து வைத்திருந்தது. இதில் இரண்டு படங்கள் வெளியாகி மிக மோசமான தோல்வி அடைந்த நிலையில் மூன்றாவது படம் இப்போது உருவாகி வருகிறது.

Also Read : ஹீரோவை விட இசையமைப்பாளருக்கு 3 மடங்கு சம்பளம் அதிகம்.. தனுசுக்கே நோ ஆனா கவினுக்கு ஓகே

ஆனால் அடுத்த படமும் தனுஷை வைத்து தயாரித்தால் கஜானா ஆகிவிடுமோ என்ற பயத்தில் வேறு ஒரு ஹீரோவை தயாரிப்பு நிறுவனம் புக் செய்துள்ளது. அதாவது 1982 ஆம் ஆண்டு மூன்றாம் பிறை படத்தின் மூலம் தனது முதல் திரை பயணத்தை தொடங்கியது சத்யஜோதி பிலிம்ஸ். இந்த நிறுவனம் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தனுஷ், சினேகா நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருந்தது. இந்த படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தனுஷின் மாறன் படத்தையும் இந்நிறுவனம் தயாரித்தது. இப்படமும் தனுஷின் கேரியரில் மிக மோசமான தோல்வியை தழுவியது.

Also Read : உதயநிதியுடன் மோதிப் பார்க்கும் வாத்தி, இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்.. மீண்டும் ஓடிடி-யில் மார்க்கெட்டை ஏத்தும் தனுஷ்!

ஆனால் முதலிலேயே சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷ் உடன் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் போட்டதால் கேப்டன் மில்லர் படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தனுஷ் உள்ளார்.

மேலும் இத்துடன் தனுஷின் சவகாசம் போதும் என சத்யஜோதி பிலிம்ஸ் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸ் படத்தை தயாரிக்க விருக்கிறது. இப்போது லாரன்ஸ் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். அந்த படங்களை முடித்த பிறகு சத்யஜோதி உடன் இணைய உள்ளார்.

Also Read : ஒரே காட்சியை அரைநாள் ரீடேக் வாங்கிய தனுஷ்.. பொறுமையை இழந்து இயக்குனர் விட்ட அறை

- Advertisement -spot_img

Trending News