Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

ஹாட்ஸ்டாரில் இருக்கும் தரமான 8 த்ரில்லர் படங்கள்! மிஸ் பண்ணாதிங்க

ஹாட்ஸ்டாரில் இருக்கும் தரமான 8 த்ரில்லர் படங்கள்! மிஸ் பண்ணாதிங்க

ஹாட்ஸ்டாரில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய 10 திரில்லர் படங்கள்!
திரில்லர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு (JioHotstar) தளத்தில் பல சுவாரஸ்யமான படங்கள் உள்ளன. பல்வேறு கதைக்களங்களில் உருவான இந்தப் படங்கள் பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதிவரை சீட்டீலேயே கட்டிப்போடும். அந்த வகையில், ஹாட்ஸ்டாரில் பார்க்க வேண்டிய 8 திரில்லர் படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

1.கிஷ்கிந்தா காண்டம்
காணாமல் போன துப்பாக்கியையும், மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரையும் மையமாகக் கொண்டு நகரும் சுவாரஸ்யமான மிஸ்டரி திரில்லர் இப்ப்படம். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்தடுத்து வரும் மர்ம முடிச்சுகள் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்.

2 கண்ணூர் ஸ்குவாட்
ஒரு கொலைக் கும்பலைப் பிடிப்பதற்காக இந்தியா முழுவதும் பயணிக்கும் நான்கு போலீஸ் அதிகாரிகளின் கதையைச் சொல்லும் திரைப்படம். உண்மைச் சம்பவங்களைத் தழுவி உருவான இந்தத் திரில்லர், விசாரணை மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால் கவனம் பெற்றது.
3.ரோஷாக்
தனது மனைவியைத் தேடி வரும் மம்மூட்டியின் கதாபாத்திரத்தைச் சுற்றி நகரும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம். பழிவாங்கல், மர்மம் என வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.

4.டிரைவ் / திரிடம்
அமைதியான ஊருக்குப் பணிக்கு வரும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், அங்கு எதிர்கொள்ளும் மர்மமான குற்றங்களையும் விசாரணைகளையும் மையமாகக் கொண்டு உருவான 2026-ஆம் ஆண்டின் லேட்டஸ்ட் திரில்லர் படம்

5.ஐ, நோபடி
17 கோடி ரூபாய் வங்கிக் கொள்ளையில் எதிர்பாராத விதமாகச் சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனை மையமாகக் கொண்டு நகரும் கிரைம் திரில்லர் திரைப்படம். அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்லும்.

  1. கில் (Kill)

ஓடும் ரயிலுக்குள் நடைபெறும் அதிரடியான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவான ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம். தொடக்கம் முதல் இறுதிவரை பரபரப்பான சண்டைக் காட்சிகளுடன் நகரும் இப்படம் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கான சிறந்த தேர்வாகும்.

7.ஏ தர்ஸ்டே (A Thursday)
ஒரு பிளே-ஸ்கூல் ஆசிரியை, பள்ளியில் இருக்கும் 16 குழந்தைகளையும் பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு, பிரதமரிடம் பேச வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார். இதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் திரில்லர் இது

  1. ஆபிரகாம் ஓஸ்லர்

ஒரு சீரியல் கில்லரைப் பிடிப்பதற்காகத் தீவிரமாகத் துரத்தும் மூத்த போலீஸ் அதிகாரியின் கதையை மையமாகக் கொண்ட கிரைம் திரில்லர் திரைப்படம்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.