வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

The Railway Men Review – பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த போபால் விஷவாயு.. நம்பர் ஒன் ட்ரெண்டிங், தி ரயில்வே மென் விமர்சனம் இதோ!

The Railway Men : சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தி ரயில்வே மென் என்ற வெப் சீரிஸ் வெளியாகி இருக்கிறது. மாதவன், கே கே மேனன் மற்றும் சிலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் நான்கு அத்தியாயங்களாக வெளியாகி இருக்கிறது. சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாத இந்த தொடர் இப்போது அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

அதாவது 1984 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி இருந்தது போபால் விஷவாயு. கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை அப்படியே கண்முன் காட்டி இருக்கிறது தி ரயில்வே மென் வெப் சீரிஸ். இதில் மத்திய ரயில்வேவின் மேலாளர் ரதி பாண்டேவாக மாதவன் நடித்திருக்கிறார்.

ரயில்வே நிறுவனத்தின் நேர்மையான ஸ்டேஷன் மாஸ்டராக இஃப்தேகர் சித்திக் என்ற கதாபாத்திரத்தில் கேகே மேனன் திறம்பட நடித்திருக்கிறார். டிசம்பர் இரண்டாம் தேதி நள்ளிரவு போபாலில் யூனியன் கார்ப்பரேட் ஆலையிலிருந்து மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்த மீதைல் ஐசோசயனேட் விஷவாயு வெளியேறுகிறது.

Also Read : கொஞ்சம் கூட யோசிக்காமல் மாதவன் ஒதுக்கிய 5 ஹிட் படங்கள்.. உஷாராக டாப் இடத்தைப் பிடித்த சூர்யா

மேலும் இந்த விஷவாயு காரணமாக உயிருக்கு பிரச்சினை இருக்கிறது என்பது தெரிந்தும் ரயிலில் பணிபுரியும் அதிகாரிகள் உயிரைப் பனையம் வைத்து அதை தடுக்க முயற்சி செய்கிறார்கள். இப்போது மனிதம் பற்றி மக்கள் அதிகம் பேசி வரும் நிலையில் எண்பதுகளிலேயே தனது உயிரைப் பொருட்டாக நினைக்காமல் தியாகம் செய்ய துணிந்து இருக்கின்றனர்.

இந்நிலையில் போபால் விஷவாயு சம்பவம் பற்றி பலருக்கும் தெரியாத நிலையில் தி ரயில்வே மென் வெப் சீரிஸ் மூலம் இயக்குனர் அழகாக காட்டியிருக்கிறார். இப்போது இந்த தொடர் இணையத்தில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. மேலும் கட்டாயம் ரசிகர்கள் ஒருமுறையாவது இந்தத் வெப் தொடரை பார்த்தே ஆக வேண்டும்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 4/5

Also Read : பொண்டாட்டியை ஏமாற்றி துரோகம் செய்த 6 நடிகர்கள்.. சிவகார்த்திகேயனுக்கு முன்னாடியே அப்பாடக்கரான மாதவன்

Trending News