மீண்டும் உருவான “ஈ”.. திடீரென எழுந்த சர்ச்சை

Movie : நான் ஈ திரைப்படத்தில் தமிழ் திரையுலகில் கால் பதித்த நடிகர் நானி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

வித்தியாசமான கதை..

2012-இல் தெலுங்கில் ஈகா என்ற பெயரில் ராஜமவுலி இயக்கத்தில் ஈ-யை வைத்து வித்தியாசமான கதையாக வெளியான திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்தது. தமிழில் நான் ஈ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இப்படம் தமிழ் ரசிகர்களை மிரள வைத்தது.

பிந்து‘ இன்று கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படத்தில் இருந்து சமந்தாவுக்கு ஃபேன் பேஜ் அதிகமாகிவிட்டது.

படத்தில் ஹீரோ ஹீரோயின் கதாபாத்திரம் மட்டுமின்றி வில்லனான சுதீப் நடிப்புக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

பரபரப்பை கிளப்பிய படம்..

இந்நிலையில் கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான லவ்லி திரைப்படத்தில் “நான் ஈ” படம் அதாவது ஈகா திரைப்படத்தில் இருக்கக்கூடிய அதே போஸ்டரை பயன்படுத்தியது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈகா படத்தைப் போலவே காப்பி அடித்திருக்கிறார்கள் என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

அதிர்ச்சியான முடிவு:

தங்களது ஈகா(நான் ஈ) படத்தில் இருக்கும் அதே போஸ்டரை காப்பி அடித்து லவ்லி திரைப்படத்தில் பயன்படுத்தியதற்காக ஈகா தயாரிப்பாளர் லவ்லி படக்குழுவினருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இந்த செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →