வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விக்ரம், சூர்யாவுக்கு நடுவே இருக்கும் மிகப்பெரிய மனக்கசப்பு.. கல்யாணத்திற்கு கூட கூப்பிடாததற்கு இதுதான் காரணம்

Vikram Surya Misunderstanding: சினிமாவில் ஒரு படத்திற்காக கடின உழைப்பு போடுபவர்களில் சிவாஜி மற்றும் கமலுக்கு அடுத்து இருப்பவர்கள் விக்ரம் மற்றும் சூர்யா தான். இவர்கள் இருவருமே சமகாலத்தில் போராடி முன்னுக்கு வந்தவர்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரைக்கும் விக்ரம் மற்றும் சூர்யா இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. ஆனால் அதன் பின்னர் இவர்கள் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை கூட இல்லாத அளவுக்கு தான் இப்போது இருக்கிறது.

விக்ரம் மற்றும் சூர்யா இருவருக்குமே பொதுவான விஷயமாக இருப்பவர் இயக்குனர் பாலா. விக்ரமுக்கு சேது, சூர்யாவுக்கு நந்தா என இரண்டு படங்களை கொடுத்து இருவரையுமே தமிழ் சினிமாவில் தூக்கி விட்டார். இந்த இருவரையும் வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என இயக்குனர் பாலா ஆசைப்பட்டது தான் அந்த இரண்டு ஹீரோக்களின் பிரிவுக்கும் காரணமாக அமைந்தது.

Also Read:டாப் 10 படத்தின் டிஆர்பி ரேட்டிங்கை வெளியிட்ட கலைஞர் டிவி.. சிம்மாசனம் போட்டு முதலிடத்தில் சூர்யா

விக்ரம் மற்றும் சூர்யாவை வைத்து பாலா இயக்கிய படம் தான் பிதாமகன். இந்த படத்தில் விக்ரம் சித்தன் என்னும் கேரக்டரில் வெட்டியானாக நடித்திருப்பார். படம் முழுக்க அவருக்கு வசனமே இருக்காது. அதே நேரத்தில் சூர்யா படத்தில் காமெடி காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். சூர்யாவுக்கு காமெடியும் வரும் என்பதை மக்களுக்கு உணர்த்திய படம் பிதாமகன்.

பிதாமகன் படத்தால் ஏற்பட்ட மனக்கசப்பு

பிதாமகன் படத்தில் ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்தே விக்ரமுக்கு அவருடைய கேரக்டர் மீது பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்திருக்கிறது. படம் முழுக்க சூர்யாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை போலவும், விக்ரம் ஒப்புக்கு சப்பானாக இருப்பது போலவுமே அவருக்கு தோன்றி இருக்கிறது. ஒரு கட்டத்தில் டப்பிங் சமயத்தில் இயக்குனர் பாலாவிடம் சென்று சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை கட் பண்ணுமாறு கூட விக்ரம் கேட்டிருக்கிறார்.

இந்த விஷயம் சூர்யாவின் காதுகளுக்கு சென்ற பிறகு, அவர் விக்ரமிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். உண்மையில் பிதாமகன் படத்தில் அதிகமாக ஸ்கோர் செய்தது விக்ரம் கேரக்டர் என்பது பட ரிலீஸ் க்கு பிறகு தான் விக்ரமுக்கு புரிந்திருக்கிறது. அதே சமயத்தில் விக்ரம் தொடர்ந்து ஜோதிகாவை தன்னுடைய படங்களில் நடிக்க வைத்தது சூர்யாவை வெறுப்பேற்றுவதற்கு என்பது போல் சொல்லப்படுகிறது. இதனால் இவர்களுக்கிடையே மனக்கசப்பு உருவாகிவிட்டது.

இந்த மன கசப்பு காரணமாகத்தான் சூர்யா மற்றும் ஜோதிகாவின் திருமணத்திற்கு விக்ரமுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் விக்ரம் வேறு ஒரு பிரச்சனையில் இருந்தார், அதனால் தான் அந்த திருமணத்திற்கு வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் நடந்த கார்த்தியின் திருமணத்தில் விக்ரம் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:அஜித்துக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி.. பலிகிடா ஆகும் ரஜினி, சூர்யா விசுவாசிகள்

Trending News