செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கேப்டனை துச்சமாக நினைத்த தளபதி விஜய்.. உண்மையை வெட்ட வெளிச்சமாகிய எஸ்ஏசி

Vijay: கேப்டன் விஜயகாந்த் இறந்த தருணத்தில் தான் அவருடைய ரசிகர்கள் அவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள் என்பது அதிகமாக வெளியில் தெரிய ஆரம்பித்தது. அதேபோன்று கேப்டனின் ரசிகர்களுக்கு ஒரு சில நடிகர்கள் மீது இருந்த கோபமும் வெளிப்பட்டது. தங்கள் தலைவனின் இழப்பு ஒரு பக்கம், அவர் உதவிய ஒரு சிலர் அவரை ஏமாற்றியது ஒரு பக்கம் என கேப்டனின் ரசிகர்கள் இரண்டு உணர்வுகளையும் வெளிப்படுத்தினார்கள்.

கேப்டன் ரசிகர்களின் கோபம் உச்சத்தில் இருந்தது நடிகர் வடிவேலு மீது தான். அந்த இரண்டு நாட்களில் அவர் பொதுவெளிகளில் தென்பட்டு இருந்தார் என்ன ஆகி இருப்பார் என்று கூட சொல்ல முடியாது. அந்த அளவுக்கு கொதித்து போய் கிடந்தார்கள் விஜயகாந்தின் ஆதரவாளர்கள். அதேபோன்று நடிகர் விஜய் மீதும் கேப்டனின் ஆதரவாளர்களுக்கு மனக்கசப்பு இருக்கிறது.

கேப்டன் இறந்த அன்று நள்ளிரவில் விஜய் அவருடைய கட்சி அலுவலகத்திற்கு சென்று கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த கேப்டனின் ஆதரவாளர்கள் நன்றி கெட்டவனே, வெளியே போ என கோஷமிட ஆரம்பித்தார்கள். அதையும் தாண்டி கூட்டத்தில் ஒருவர் தூக்கி எறிந்த செருப்பு ஒன்று விஜயின் தோள் மீது பட்டது. விஜய் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வெளியேறினார்.

Also Read:அவர புதைச்ச இடத்தில இன்னும் ஈரம் கூட காயல, இதெல்லாம் தேவையா தளபதி.? மானத்தை கூறு போடும் விசுவாசிகள்

கேப்டன் ரசிகர்கள் விஜய் மீது ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்பதற்கு சமூக வலைத்தளங்களில் ஒரு சில காரணங்கள் எடுத்து வைக்கப்படுகிறது. உடல் நலம் குன்றி இருந்த விஜயகாந்த் வீட்டில் இருந்த போது நிறைய பேர் அவரை நேரில் சந்தித்து வந்தார்கள். விஜய் ஒரு முறை கூட கேப்டனை நேரில் சென்று பார்க்கவில்லை. விஜய்க்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் ரஜினி, கமல், யோகி பாபு போன்றோர் விஜயகாந்தை நேரில் சென்று பார்த்தது குறிப்பிடத்தக்கது.

கேப்டனை கண்டு கொள்ளாத தளபதி விஜய்

விஜய் அடுத்து அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்திகள் வெளியான போது தொடர்ந்து சீமான், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் போன்றவருக்கு போன் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி இருந்தார். கேப்டனுக்கு கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தநாள் வந்தபோது விஜய் வாழ்த்து எதுவும் சொல்லவில்லை. விஜயகாந்த் அரசியலில் ஆக்டிவ்வாக இல்லாததால் விஜய் அவரை புறக்கணித்து விட்டார் என சொல்லப்படுகிறது.

சமீபத்தில் நடந்த பட விழா ஒன்றில் எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மகன் விஜய் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டதாகவும், ஆனால் அவர் நடித்த முதல் படம் வெற்றி பெறவில்லை என்றும் சொல்லி இருந்தார். அப்போது மகனின் வெற்றிக்காக விஜயகாந்தை அவருடன் சேர்ந்து ஒரு படம் பண்ணுமாறு கேட்டபோது, அவர் சம்பளமே இல்லாமல் நடித்துக் கொடுத்துவிட்டு, தம்பி பெரிய ஹீரோவா ஆன அதுவே எனக்கு போதும் என்று சொல்லிவிட்டு சென்றதாக கூறியிருந்தார்.

விஜயகாந்த் செய்த உதவியை எஸ் ஏ சந்திரசேகர் இன்று வரை மறக்காமல் பேசுகிறார். ஆனால் விஜய் இதுவரைக்கும் ஒரு நாள் கூட எந்த ஒரு மேடையிலும் விஜயகாந்த் செய்த உதவியை வெளியில் சொன்னதில்லை. விஜயகாந்த் இருக்கும்பொழுது, விஜய் அவரை கண்டு கொள்ளவில்லை என்பதுதான் கேப்டனின் ரசிகர்களின் கோபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

Also Read:விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகம் ரெடி.. மீண்டும் திரையில் கேப்டன்

Trending News