Bigg Boss: உலக நாயகன் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகப் போகிறார் என்ற செய்தி வருஷம் தோறும் வரும் ஒன்றுதான். இரண்டாவது சீசனில் இருந்தே கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை, சம்பளப் பிரச்சனை, கால்ஷீட் பிரச்சனை என எக்கச்சக்க வதந்திகள் வரும்.
ஆனால் ஆண்டவர் சரியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தரிசனம் கொடுத்து விடுவார். இந்த வருஷம் வதந்தி எல்லாம் உண்மையாகி விட்டது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கமல் பாதியில் விலகி விடுவார் என பேசப்பட்டது.
பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது, மாயா எலிமினேட் ஆகாமல் உள்ளே இருப்பது என அந்த சமயம் நிறைய பிரச்சனைகள் இருந்தது. சினிமாவில் ஒன்று இரண்டு படங்களை நடித்து தன்னுடைய முகத்தை காட்டிய பிரதீப்புக்காக, உலக நாயகன் கமலஹாசனையே மக்கள் கரித்துக் கொட்டும் நிலைமை ஏற்பட்டது.
இதை தான் யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று சொல்வார்கள். இதை புரிந்து கொண்டு கமல் பிக் பாஸில் இருந்து விலகியதாக முதலில் பேசப்பட்டது. ஆனால் உண்மை காரணம் அது அல்ல என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.
பிக் பாஸில் இருந்து விலக உண்மை காரணம் இதுதான்
உண்மையிலேயே கமல் தன்னுடைய உடல்நல பிரச்சனையால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறார். நீண்ட நேரம் நின்று அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாதது தான் கமலின் இந்த முடிவுக்கு காரணம்.
விஜய் டிவி எவ்வளவு பேசியும் கமல் பிடி கொடுப்பதாய் இல்லை. சம்பள விஷயத்தில் இருந்து சூட்டிங் நேரம் வரைக்கும் தங்களால் முடிந்தவரை சேனல் கமலிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்திருக்கிறது. ஆனால் கமல் நேரடியாக தன்னுடைய முடிவை ட்விட்டர் பதிவு மூலம் விஜய் டிவிக்கு தெரிவித்துவிட்டார்.
ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் விஜய் டிவி பெரிய அடி வாங்கிவிட்டது. இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் இல்லாமல் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கமல் இடத்தை நிரப்ப எந்த நடிகரை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் விஜய் டிவி புலம்பி தவித்துக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை சூர்யா தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனால் சூர்யாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சேனல் அனுப்பி இருக்கிறது.
ஆனால் அவருக்கு அடுத்தடுத்த வேலைகள் அதிகம் இருப்பதால் இந்த வாய்ப்பை வேண்டாம் என சொல்லிவிட்டார். தற்போது விஜய் சேதுபதி இடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.
இன்னொரு பக்கம் நடிகர் பார்த்திபனை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த சேனல் திட்டமிட்டு இருப்பதாகவும் பேசப்படுகிறது.
ஆண்டவரை எலிமினேட் செய்த விஜய் டிவி
- கமல், சிம்புவை நம்பி மோசம் போன சூப்பர் ஹிட் பட இயக்குனர்
- பிக் பாஸில் இருந்து விலகுகிறேன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கமல்
- இந்தியன் 2 ஓடிடி ரிலீசில் நெட்பிலிக்ஸ் செய்த அநியாயம்