Operation Vijay: ட்விட்டரில் எப்போதுமே ஏதாவது ஒரு ஹேஷ்டேக் திடீரென நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரெண்டாக்கப்படும். அப்படி இன்று காலையில் இருந்து ஆபரேஷன் விஜய் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி அல்லது லியோ திரைப்படத்தை வைத்து தான் அவருடைய ரசிகர்கள் ஏதோ ஒரு விஷயத்தை ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார்கள் என்று பலரும் நினைத்திருந்தனர்.
ஆனால் இந்த ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகி கொண்டு இருப்பதோடு, இந்தியர்கள் ஒவ்வொருவரும் நினைத்து பெருமைப்படும் விஷயமாக இருக்கிறது. நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட ஹேஷ்டாக்காக இருக்குமோ என்று நினைத்து பார்த்தால் இது வேற அளவில் நாம் கொண்டாடும் விஷயமாகவும், பெருமைப்படும் விஷமாகவும் இருக்கிறது.
Also Read: அடுத்த முதல்வரா? என்னப்பா தளபதிக்கு பீதியை கிளப்புறீங்க! கிழித்து தொங்கவிட்ட ஹீரோவின் அப்பா
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து அதிகமாக பிரச்சனை ஏற்படுத்தும் நாடு என்றால் அது பாகிஸ்தான் தான். தங்களால் முடிந்த வரை இந்தியாவிற்கு எல்லா விதத்திலும் இடஞ்சலை கொடுக்கும் நாடாக இருக்கிறது. இதனாலேயே நம் ராணுவ வீரர்கள் காஷ்மீர் எல்லைகளில் இரவு பகல் பார்க்காது நமது நாட்டின் எல்லையை காத்து வருகிறார்கள். இதில் ஸ்ரீநகர் பகுதியில் அமைந்திருக்கும் இடம்தான் லே.
இந்த லே பகுதி ரொம்பவும் குளிரான பகுதியாகும். இதனாலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தத்தின்படி செப்டம்பரிலிருந்து இருந்து ஏப்ரல் மாதம் வரை ராணுவ வீரர்கள் இங்கு தங்காமல் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சென்று விடுவார்கள். இப்படி 1999 ஆம் ஆண்டு இந்திய வீரர்கள் குளிர்காலம் முடிந்து ஏப்ரல் மாதம் லே பகுதிக்கு திரும்பும் பொழுது பாகிஸ்தான் அறிவிப்பில்லாத போரை தொடங்கியது.
இந்தியாவும் இந்தப் போரில் இறங்கி அடித்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து அத்தனை வீரர்களும் லே பகுதிக்கு அனுப்பப்பட்டார்கள். நம் ராணுவ வீரர்களும் கடும் குளிர் பாராது பாகிஸ்தான் ராணுவத்திடம் சண்டையிட்டனர். மேலும் முன்னறிவிப்பு இல்லாத இந்த போருக்கு பல நாடுகளும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து வந்தன. ஒரு கட்டத்தில் இந்திய ராணுவத்தை சமாளிக்க முடியாமல் 1999 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி பாகிஸ்தான் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கியது.
இந்த போருக்கு பெயர் தான் கார்கில் போர். இந்த போரில் இந்தியா மிகப்பெரிய வெற்றி அடைந்ததோடு கிட்டத்தட்ட 500 ராணுவ வீரர்களையும் இழந்தது. இந்த போரில் கலந்து கொண்ட அத்தனை ராணுவ வீரர்களையும் கொண்டாடுவதற்காகத்தான் வருடா வருடம் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் போர் தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது இந்தியா தொடுத்த இந்த போருக்கு பெயர்தான் ஆபரேஷன் விஜய்.