வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

யாருக்கும் பிரச்சினை இல்லாமல் போக சூர்யா எடுத்த முடிவு.. சுதா கோங்குரா படத்துக்கு எண்டு கார்டு போட்டதன் ரகசியம்!

The reason behind Suriya’s exit from Sudha kongaras film purananooru: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா பல வேடங்கள் ஏற்று நடித்துள்ள கங்குவாவில் வி எஃப் எக்ஸ் காட்சிகள் உயர்தரத்துடன் மேம்படுத்தப்பட்டு விரைவில் ரிலீஸ் ஆக தயாராகி உள்ளது.

கிட்டத்தட்ட 38 மொழிகளுக்கும் மேலாக சர்வதேச தரத்தில் பான் இந்தியா மூவியாக வெளிவரும் கங்குவாவை காண இந்திய ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து சூர்யா,பாலிவுட்டில் கர்ணா என்கின்ற திரைப்படத்திலும், சுதா கோங்குரா இயக்கும் புறநானூறு என்கின்ற திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.

சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் மீண்டும் சுதா கோங்குரா, சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணி இணைவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி இது ஜிவியின் நூறாவது படம் என்பதால் அவரும் படவேலைகள் ஆரம்பித்தவுடன் சுடச்சுட அப்டேட் கொடுத்து வந்தார்.

படத்தின் தலைப்பு வெளியாகி பிரீ ப்ரோடக்ஷன்க் ஒர்க் முடிந்த பின்னும் படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படாமல் தாமதமாகி கொண்டே வந்தது. 

ஒரு சில காட்சிகளை சூர்யா இல்லாமலே படமாக்கி வந்தார் சுதா கோங்குரா.

இந்நிலையில் திடீரென படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு முழு முதல் காரணம் சூர்யா தானாம்.

புறநானூறு படத்தில் இருந்து சூர்யா விலக காரணம்

பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்ததன் பெயரில் மும்பையிலேயே செட்டிலாகி விட்டார் சூர்யா. தற்போது விழா ஒன்றில் கலந்து கொண்ட சூர்யா கங்குவாவின் வில்லன் பாபி தியால் அவர்களை ஏகபோகமாக  சகோதரத்துவத்துடன் போற்றி புகழ்ந்தார்.

கங்குவாவை தொடர்ந்து கர்ணன் படத்தில் நடிக்க உள்ள சூர்யா, பாலிவுட் மார்க்கெட்டை இலக்காக வைத்துள்ளார். இதற்கு பின்னாடி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேக்ரவுண்ட்ல பல வேலைகள் செய்து வருகிறாராம்.

சுதா கோங்குராவின் புறநானூறு படத்தில் ஏன் நடிக்கவில்லை என்று காரணத்தை அலசி பார்த்தபோது, இப்படத்தில் இந்தி திணிப்பு பற்றிய ஸ்டோரி வருகிறது.

பாலிவுட் படங்கள் நடிக்க பிளான் பண்ணிய சூர்யா இப்போதைக்கு இந்த படம் வேண்டாம் என்று முடிவு எடுத்து உள்ளார்.

இப்போது சூர்யா தமிழ் ஸ்டார் மட்டுமல்ல பான் இந்தியா ஸ்டார் ஆகி உள்ளதால் பல நிகழ்வுகளையும் செயல்களையும் கருத்தில் கொள்ள  வேண்டியுள்ளது.

இதனை தொடர்ந்து சுதா கோங்குராவும் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில்  கவனம் செலுத்தி வருகிறார்.

Trending News