தாமாக முன்வந்து விளக்கம் கொடுத்த வெற்றிமாறன்.. பதட்டத்திற்கு பின்னால் இருக்கும் இப்படி ஒரு காரணம்!

Vadachennai 2: பெரும்பாலும் திரை நட்சத்திரங்கள் தங்களை சம்பந்தப்படுத்தி வரும் எந்த ஒரு வதந்திகளுக்கும் பதில் கூறாமல் கடந்து சென்று விடுவார்கள். அதே போன்று தான் நேற்று வடசென்னை 2 படம் எடுப்பதற்கு தனுஷ் காப்புரிமை அளிக்க வெற்றிமாறனிடமே 20 கோடி கேட்டு இருக்கிறார் என்ற செய்தி பரவ ஆரம்பித்தது.

தனுஷ் இப்படிப்பட்டவரா என தொடர்ந்து அவர் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. திடீரென இன்று காலையில் வெற்றி மாறன் தாமாக முன்வந்து தனுஷ் தன்னிடம் எந்த பணமும் கேட்கவில்லை என தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்.

விளக்கம் கொடுத்த வெற்றிமாறன்

வெற்றிமாறன் தனுஷின் பெயர் கெட்டுவிடக் கூடாது என பதறிப் போய் இப்படி ஒரு பேட்டி கொடுப்பதற்கும் காரணம் இருக்கிறது. பாலு மகேந்திராவின் இயக்கத்தில் தனுஷ் நடித்த அது ஒரு கனாக்காலம் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் வெற்றிமாறன்.

அப்போதுதான் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. வெற்றிமாறனிடம் வட சென்னை மற்றும் பொல்லாதவன் என்ற இரண்டு கதைகள் இருந்தது. அப்போது இருவருமே இருந்த பொருளாதார சூழ்நிலையில் வடசென்னை படத்தை எடுக்க முடியாது.

வெற்றிமாறனை நம்பி ஒரு 2 மணி நேரம் பைக்கை மட்டுமே சுற்றி நகரும் கதையை நடிக்க ஒப்புக்கொண்டார். தனுஷ் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னமே வெற்றிமாறனுக்கு திருமணம் நடந்தது எல்லோருக்கும் தெரியும்.

அந்த சமயம் வெற்றிமாறன் தனுஷின் ரொம்பவும் தயக்கப்பட்டு திருமணத்திற்கான பணத்தை கேட்டிருக்கிறார். தனுஷ் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே அவர் கேட்ட பணத்தை கொடுத்து இருக்கிறார். படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெறுமா என்று கூட தனுஷுக்கு தெரியாது.

அப்போவே வெற்றிமாறனுக்கு நட்பு ரீதியாக இவ்வளவு பெரிய உதவியை செய்து இருக்கிறார். அவர் மீது ஒரு பழி வரும் போது கேள்விகளுக்கு காத்திராமல் விழுந்த பழியை நீக்குவது நல்ல நட்புக்கு அழகு என்றுதான் வெற்றிமாறன் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →