Vijay: விஜயின் அரசியல் பயணத்தை பரந்தூருக்கு முன், பின் என பிரித்துக் கொள்ளலாம். முதல் அரசியல் மாநாடு சாதாரணமான நடிகருக்கு கூடிய கூட்டம் என சொல்லி முடித்து விட்டார்கள்.
ஆனால் விஜய் பரந்தூரில் பேசிய ஒவ்வொரு விஷயமும் தமிழக மக்களை யோசிக்க வைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழக வெற்றி கழகம் கட்சியை பொறுத்த வரைக்கும் எல்லாமே புஸ்ஸி ஆனந்த் என்றுதான் வெளியில் தெரிகிறது.
கடைசியாய் நடந்த நிர்வாகிகள் மீட்டிங்கில் ஆனந்தை விஜய் வெளியே அனுப்பிவிட்டு நிர்வாகிகளிடம் பேசினார்.
ஜான் ஆரோக்கியசாமி
என்னப்பா நடக்குது கட்சியில் என எல்லோருக்குமே சந்தேகம் வந்தது. அப்போது வெளியே வந்த பெயர் தான் ஜான் ஆரோக்கியசாமி. இவர்தான் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் ஆலோசகர்.
ஜான் ஆரோக்கியசாமி வெளிநாடுகளில் பல உயரிய நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.
தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் போது மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற பாமகவின் அரசியல் பிரச்சாரம் பெரிய அளவில் வைரலானது.
அன்புமணிக்கு முதலமைச்சராகும் தகுதி இருப்பதாக கூட மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்கு பின்னால் இருந்தவர் ஜான் ஆரோக்கியசாமி தான்.
அது மட்டும் இல்லாமல் மகாராஷ்டிராவில் சரத் பவாருக்கு அரசியல் வியூகம் வகுத்துக் கொடுத்தவரும் இவர்தான். இன்று திமுகவுக்கு எங்கே அடிச்சா வலிக்கும் என சரியாக புரிந்து கொண்டு காய் நகர்த்துகிறார்.
விஜயின் முதல் அரசியல் பயணமான பரந்தூர் பயணமே அரசியல்வாதிகளை விக்கி திக்க வைத்ததற்கு காரணம் இந்த ஜான் ஆரோக்கியசாமி தான்.