
Vikram: மலையாள உலகின் முதல் பான் இந்தியா படமாக வெளிவரும் எம்பூரான் படத்துடன் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படம் மோத இருக்கிறது.
விக்ரமுக்கு கடந்த சில வருடங்கள் ஆகவே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றிப்படங்கள் என எதுவும் இல்லை.
வெற்றியை நோக்கி பயணிக்கும் ஹீரோக்கள் எப்போதுமே சேஃப் ஆக படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் விக்ரம் இப்படி அதிரடியாக முடிவு எடுப்பதற்கு காரணம் வீர தீர சூரன் படம் ஏற்கனவே அதன் வெற்றிக்கான விஷயங்களை வித்திட்டது தான்.
வீர தீர சூரனின் வெற்றிக்கு வித்தான 5 காரணங்கள்!
படத்தின் மிகப்பெரிய பாசிட்டிவ் இயக்குனர் அருண் மற்றும் அவருடைய கதை. தமிழில் பல வருடங்கள் வெற்றிப்படங்கள் இல்லாமல் தவித்த சித்தார்த்துக்கு சித்தா படத்தை கொடுத்து வெற்றி ஹீரோவாக மாற்றினார்.
எஸ் ஜே சூர்யா இருந்தாலே படம் வெற்றி தான் என்பது தமிழ் சினிமாவின் தற்போதைய எழுதப்படாத விதி என்பது எல்லோருக்கும் தெரியும்.
சமீப காலமாக தன்னுடைய படங்களின் மூலம் பெரிய கவனத்தை ஈர்த்து வரும் சூரஜ் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.
கோலிவுட்டில் தன்னுடைய நடிப்பின் மூலம் மிளிர்ந்து வரும் துஷாரா விஜயன் படத்திற்கு மற்றும் ஒரு பாசிடிவ். இதைத் தாண்டி வீர தீர சூரன் இரண்டாம் பாகம் தான் முதலில் ரிலீஸ் ஆகிறது.
இதற்கு முதல் பாகம் இருக்கிறது என்ற தகவல் வெளியானது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டது. இந்த காரணங்களால் தான் சீயான் விக்ரம் எம்பூரான் ரிலீஸ் தேதியில் அசராமல் அடிக்க முடிவெடுத்திருக்கிறார்.