VJ Archana: சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய அர்ச்சனா தற்போது பன்முக திறமை கொண்டவராக பட்டையை கிளப்பி வருகிறார். திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் மீடியா முன் வராமல் இருந்த அர்ச்சனா, கடந்த சில வருடங்களில் எல்லா தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக முத்திரை பதித்து விட்டார். மேலும் இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
90ஸ் கிட்ஸ்களின் பேவரிட் ஆங்கராக இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தன்னுடைய பெயரை கொஞ்சம் கெடுத்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவருடைய மகளும் மீடியாவில் இருப்பது இன்னுமே இவர்களை சுற்றி பல நெகடிவ் விமர்சனங்கள் எழுந்ததற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இருந்தாலும் அர்ச்சனா அவருடைய பணியை அவர் போக்கில் செய்து கொண்டுதான் இருக்கிறார்.
Also Read:அனுஷ்காவை கைகழுவி விட்ட பாகுபலி.. அரியணை ஏறிய தேவசேனாவுக்கு மணமேடை ஏற வாய்ப்பே இல்லையாம்
அர்ச்சனாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். பொருளாதார ரீதியாக அர்ச்சனா நல்ல நிலையில் இருந்தாலும் மீடியாவை தன்னுடைய கனவாக நினைத்து வேலை செய்து வருகிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அர்ச்சனா, அவருடைய கணவரை விவாகரத்து செய்யும் நிலைக்கு போய்விட்டதாகவும், அவருடைய மகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு பேசிய பின் இருவரும் இணைந்ததாகவும் சொல்லியிருந்தார்.
இதை கேட்ட ரசிகர்களுக்கு இந்த விஷயம் ரொம்பவே அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் தற்போது தான் இந்த விவாகரத்து முடிவுக்கான காரணம் வெளிவந்திருக்கிறது. அர்ச்சனா சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதியாகி, அறுவை சிகிச்சை செய்து கொண்டதே அவரே தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். அர்ச்சனாவுக்கு மூளையில் இருந்து ஒரு விதமான திரவம் கசிய ஆரம்பித்திருக்கிறது. இதனால் தான் கோபம் மற்றும் நெகட்டிவிட்டி அதிகமாகி தான் என்ன செய்கிறேன் என்பதையே சுயநினைவு இல்லாமல் செய்திருக்கிறார்.
Also Read:சொத்துக்காக பொட்டி பாம்பாக அடங்கும் குணசேகரன்.. ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தும் ஜீவானந்தம்
அதற்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அர்ச்சனாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது சிகிச்சையின் மூலம் சரி செய்யப்பட்டாலும், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் அந்த திரவம் கசிய வாய்ப்பு இருக்கிறதாம். இதனாலேயே எப்போ என்ன நடக்கும் என்று தெரியாத பயத்திலே தான் அவரும் அவருடைய குடும்பத்தினரும் இருக்கிறார்களாம்.
சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனாவும் அவ்வளவு ஆக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை கம்மி பண்ணிக் கொண்டிருக்கிறார். அர்ச்சனாவிற்கு இப்படி ஒரு விசித்திரமான நோய் இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது.
Also Read:நாக்கை தொங்க போட்டு அலையும் கோபி.. இந்த விஷயத்தில் பாக்கியாவை மிஞ்ச முடியாமல் தவிக்கும் ராதிகா