வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அப்படி என்ன செய்தார் இளையராஜா.? பவதாரணியின் இறப்புக்கு கங்கை அமரன் வராத காரணம்

Ilayaraja-Gangai Amaran: இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார். புற்றுநோய் பாதிப்பினால் இருந்த அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையுமே அதிர வைத்தது.

அதைத்தொடர்ந்து அவருக்கு பல பிரபலங்களும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் இளையராஜாவின் சொந்த தம்பியான கங்கை அமரன் வரவில்லை. இதுதான் இப்போது பெரும் விவாதமாக மாறி இருக்கிறது.

இது குறித்து தற்போது பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது இளையராஜா, கங்கை அமரன் இருவருக்கும் பல வருடங்களாகவே மனக்கசப்பு இருந்து வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் இளையராஜா கங்கை அமரன் இசையமைத்த பாடல்களுக்கு தன்னுடைய பெயரை போட்டுக் கொண்டிருக்கிறார்.

Also read: இளையராஜா ரகுமான் ஜேசுதாஸ் மூவரும் இணைந்த ஒரே பாடல்.. இந்த பாடலுடன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட நடிகை

அதேபோல் பல பிரபலங்களுடன் இவர் கருத்து வேறுபாடிலும் இருந்திருக்கிறார். இதனால் பல பிரச்சனைகளையும் இளையராஜா சந்திக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு உறுதுணையாக இருந்தது கங்கை அமரன் தான்.

இவ்வளவு செய்தும் கூட இளையராஜா ஒரு மனக்கசப்பின் காரணமாக கங்கை அமரனை வெளியே போடா என தகாத வார்த்தை ஒன்றைக் கூறி திட்டி இருக்கிறார். மேலும் இளையராஜாவின் மனைவி இறந்தபோது கூட கங்கை அமரன் உள்ளே அனுமதிக்கப்படவில்லையாம்.

அதன் பிறகு பல சமரசங்களுக்கு பிறகு தான் தன் தம்பியை இளையராஜா உள்ளே விட்டிருக்கிறார். இப்படி பல சம்பவங்களின் காரணமாக கங்கை அமரன் அண்ணனை விட்டு ஒதுங்கி இருக்கிறார். அதையெல்லாம் மறக்க முடியாத நிலையில் தான் தற்போது பவதாரணியின் இறப்புக்கு கூட அவர் வராமல் இருந்ததாக பயில்வான் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

Also read: பார்சலில் வந்த வெடிகுண்டு.. முடிசூடா மன்னன் இளையராஜா மேல் விழுந்த தீராப்பழி

Trending News