திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

பிரியா பவானி சங்கரின் காதல் தோல்விக்கு இதுதான் காரணம்.. மோசமாக விமர்சித்த பயில்வான்

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுத்த பிரியா பவானி சங்கர், தற்போது பல படங்களை கையில் வைத்துக்கொண்டு செம பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரியா பவானி சங்கரின் காதலர் அவரை ஏமாற்றி விட்டதாகவும் அவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை நடிகரும் பிரபல விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் படுமோசமாக விமர்சித்து இருக்கிறார்.

சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த பிரியா பவானி சங்கர், தற்போது பல படங்களில் முன்னணி நடிகையாகவும் சப்போட்ட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சம்பளத்தை ஏற்றாமல் இருப்பதால் தயாரிப்பாளர்களுக்கும் பிடித்தமான நடிகையாக இருக்கிறார். மேலும் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் சென்னையில் அதுவும் கடலோரத்தில் புதிய வீடு வாங்கி அவருடைய காதலர் ராஜவேலுடன் குடியேறினார்.

Also Read: ஹிட்டு, பிளாப்னு சொல்ல நீங்க யாரு.? ப்ளூ சட்டை, பயில்வனை வம்புக்கு இழுத்த வாரிசு நடிகை

இந்நிலையில் ‘யார் கண்ணு பட்டதோ தெரியல’ பிரியா பவானி சங்கர் தனது காதலரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது. இவர்கள் எதற்காக பிரிந்தனர் என்ற காரணத்தை பயில்வான் ரங்கநாதன் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் இதுவரை ஆபாசமான கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. மிகவும் குடும்ப பாங்கான வேடம் மற்றும் எதார்த்தமான அடுத்த வீட்டுப் பெண் போல தான் ஒவ்வொரு படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் கல்லூரி காதலர் ராஜவேலுவை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், அதற்கு முன்னேற்பாடாக ஈசிஆர் கடலோரத்தில் பெரிய பிளங்களா வாங்கி காதலனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்று சொல்வார்கள் ஆனால் இதற்கு முன்பே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருக்கின்றனர். மேலும் பிரியா பவானி சங்கர் தனக்கு நெருங்கிய தோழிகளிடம், ‘ராஜவேலு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவர் நினைப்பது போல் நான் இல்லை’ என்று புலம்பித் தவிக்கிறார்.

Also Read: அந்த பொண்ணோட எனக்கு கனெக்ஷனா.? மேடையில் பயில்வனை வெளுத்து வாங்கிய K.ராஜன்

ஆனால் பிரியா பவானி சங்கரை விட்டு காதலர் விலகுவதற்கு முக்கிய காரணம், ‘சினிமாவில் நடிக்க வந்துவிட்டாலே நடிகர்களுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து நெருக்கமாக நடிக்க வேண்டும். மேலும் சூட்டிங் நடக்கும் போது பல நாட்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டும். இது நமக்கு ஒத்து வராது ஆகையால் சினிமாவை விட்டு விலகி விடு’ என்று ராஜவேலு, பிரியா பவானி சங்கரிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் பிரியா பவானி சங்கர் திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டையில் முடிந்தது. இவ்வளவு நாள் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இந்த இளம் ஜோடி திடீரென்று சண்டை போட்டு பிரிந்திருப்பது அவர்களுடைய நட்பு வட்டாரத்திற்கு பேரதிர்ச்சியை தந்தது. மேலும் காதலர்கள் பிரிந்த வலி தெரியாத பயில்வான், அதை கண்டபடி விமர்சித்து பேசுவதை குறித்து பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் திட்டித் தீர்க்கின்றனர்.

Also Read: போதைக்கு அடிமையாகி மார்க்கெட்டை இழந்த சூர்யா பட வில்லன்.. புட்டு புட்டு வைத்த பயில்வான்

Trending News