புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிரம்மாண்டமாக உருவான ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு.. 10 கோடியை வீணாக்கிய காரணம் தெரியுமா.?

பிரமாண்ட படைப்புகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் ஷங்கர். இவருடைய இளைய வாரிசான அதிதி ஷங்கர் தற்போது திரைத்துறையில் கால் பதித்துள்ளார். அதுபோல் இவருடைய மகன் படங்களில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் எந்த அறிவிப்பும் இல்லாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களை வைத்து திருமணத்தை சிம்பிளாக முடித்துவிட்டனர்.

தற்போது ஷங்கர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என திட்டமிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சி மே 1ஆம் தேதி நடப்பதாக இருந்தது. மேலும் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக 1500 பத்திரிக்கைகள் அடிக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சிக்காக செட் போடுவது என அனைத்து வேலைகளும் தயாராக இருந்தது. இந்நிலையில் ஷங்கர் இந்த வரவேற்பு தேதியை மாற்றி உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்காக ஷங்கர் கிட்டத்தட்ட 10 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளார். இப்போது திருமண வரவேற்ப்பை நிறுத்தியதற்கான காரணம் என்ன என்பது வெளியாகியுள்ளது. அதாவது ஷங்கர் மகனுக்கும், மருமகளுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை முற்றிப் போய்யுள்ளது. அதை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஷங்கர்.

இதனால் தற்போது வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினால் அது சரியாக வராது என நிறுத்தியுள்ளார். மேலும் இதற்காக இவ்வளவு கோடிகள் செலவு செய்தது எல்லாம் வீணாய் போய் உள்ளது. இந்த சண்டையை கொஞ்சம் ஆறப்போட்டு பின்பு சமாதானம் ஆன பிறகு வரவேற்பு நிகழ்ச்சியில் வைத்துக் கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.

Trending News