வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மோனல் போல் சிம்ரனுக்கும் ஏற்பட்ட காதல் தோல்வி.. மார்க்கெட் சரிய இவர்தான் காரணம், அடிச்சு கூறும் பயில்வான்

Actress Simran: தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கோலோச்சி இருந்த நடிகை தான் சிம்ரன். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என சிம்ரன் ஜோடி போடாத ஹீரோக்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவரது மார்க்கெட் சரிந்து விட்டது.

அதாவது சிம்ரனின் தங்கை மோனலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கலா மாஸ்டரின் உறவினர் பிரசன்னா என்பவரை மோனல் காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவின் காரணமாக காதல் தோல்வியால் மோனல் தற்கொலை செய்து கொண்டார்.

Also Read : பணத்திற்காக ஐட்டம் டான்சராக மாற்றப்பட்ட 5 நடிகைகள்.. இடுப்பழகை காட்டி மயக்கிய சிம்ரன்

இந்த விஷயம் அப்போது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் மோனலின் நினைவு நாளில் உருக்கமான பதிவை சிம்ரன் தொடர்ந்து போட்டு வருகிறார். இந்நிலையில் சிம்ரனுக்கும் ஒரு காதல் தோல்வி இருந்துள்ளது என்பதை சினிமா விமர்சகர் பயில்வான் கூறியிருக்கிறார்.

அதாவது நடனத்தில் பேர் போன சிம்ரன் பிரபுதேவாவின் அண்ணனும், டான்ஸ் மாஸ்டரும் ஆன ராஜூ சுந்தரம் என்பவரை காதலித்து உள்ளார். மேலும் சிம்ரனின் நிறைய படங்களில் இவர் கோரியோகிராப் செய்துள்ளார். இவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயம் அப்படியே காத்து வாக்கில் கோடம்பாக்கம் முழுவதும் பரவியது.

Also Read : சிம்ரன், த்ரிஷாவுக்கு அப்புறம் நீங்க தான் டாப்பு.. 50 வயதிலும் பிரியா பவானிக்கு தூண்டில் போடும் இயக்குனர்

முன்னணி நடிகையாக இருக்கும் சிம்ரன் டான்ஸ் மாஸ்டரையா காதலிக்கிறார் என பேச்சு அடிப்பட அடுத்தடுத்த பட வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போய்விட்டது. இதைத்தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த சிம்ரன் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்போது இரண்டு மகன்களும் உள்ளனர்.

அதன் பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து அம்மா, வில்லி என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிம்ரன் நடித்து வருகிறார். கடைசியாக மாதவன் இயக்கி, நடித்த ராக்கெட்டரி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார். இந்நிலையில் அப்போது டான்ஸ் மாஸ்டர் உடன் சிம்ரன் காதல் வளையில் சிக்காமல் இருந்திருந்தால் இப்போது சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருந்திருப்பார் என பயில்வான் அடிச்சு கூறியிருக்கிறார்.

Also Read : வாய்ப்பு இறங்கும்போது கிளாமரை காட்டி ஜெயித்த சிம்ரன்.. இடை அழகில் மிரட்டி பேயாட்டம் போட்ட 5 படங்கள்

Trending News