AK 64-க்கு போட்டி போட்ட 4 இயக்குனர்கள்.. ஒற்றை காலில் நின்ற அஜித்

Ajith : இந்த வருடம் தொடக்கத்திலேயே அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் தோல்வியை சந்தித்தது. ஆனால் அதன் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். அதுவும் ஃபேன் பாயாக இந்த படத்தில் சம்பவம் செய்திருந்தார்.

அஜித் ரசிகர்களால் இந்த படம் கொண்டாடப்பட்டது. இதை அடுத்து 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போவதாக உறுதியாகிவிட்டது. ஆனால் இதற்கு முன்னதாக அஜித்திடம் ஏகே 64 படத்திற்காக நான்கு இயக்குனர்கள் கதை கூறியிருக்கிறார்களாம்.

ஆனால் ஆதிக் சொன்ன ஒன் லயன் ஸ்டோரி அஜித்துக்கு பிடித்து விட்டது. ஆகையால் அடுத்தது நாம் தான் பண்ணப் போகிறோம் என்று ஒற்றை காலில் நின்ற ஆதிக் ரவிச்சந்திரனை கமிட் செய்து விட்டார். மேலும் இது கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது.

ஏகே 64 கூட்டணி அமைய காரணம்

மேலும் இதற்கான ஸ்கிரிப்ட்டையும் இப்போது ஆதிக் தயார் செய்து வருகிறார். இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் படத்தை தயாரிக்க இருக்கிறார். அதுவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருக்கிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு அஜித்தின் சம்பளமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 180 கோடி சம்பளம் பெறுகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக ஃபேன் பாயாக ஆதிக்கு குட் பேட் அக்லீ படத்தை எடுத்து இருந்தாலும் இது அஜித்தை வைத்து முழு கேங்ஸ்டர் படமாக எடுக்க இருக்கிறார்.

அதுவும் மங்காத்தா ஸ்டைலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். இது குறித்து அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →