வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

42 வருடமாய் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்க இதுதான் காரணம்.. யாராலயும் அசைக்க முடியாத சாம்ராஜ்யம்.!

விடாமுயற்சி கூடிய உறுதியான தன்னம்பிக்கை! கறுப்பாக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ஆக முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்! பணம், புகழ், அந்தஸ்து, கௌரவம், என்று எதையும் தலையில் ஏற்றி கொள்வதில்லை ரஜினி அவர்கள்! சினிமாவில் உள்ள சக கலைஞர்களுக்கும் மதிப்பு தருவதில் ரஜினிக்கு நிகர் ரஜினி மட்டுமே!

ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறகு எத்தனை கதாநாயகர்கள் வந்தாலும், இன்றும் மக்களின் மனதில் மன்னன் தான். தற்போது தலைமுறை கூட ரஜினிகாந்த் அவர்களை ரசிக்கிறார்கள். இது உண்மையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு மட்டுமே கிடைத்த பாக்கியம்!

Also Read : உழைப்பாளர் தினத்தில் ரிலீஸ் ஆன 7 வெற்றி படங்கள்.. எவர்க்ரீன் ஹிட் கொடுத்த ரஜினிகாந்த்

யாரையும் எதிரியாக பார்க்காத குணம். யாரையும் பழிக்காத மனம். இவரை தர குறைவாக பேசிய பிரபலங்களை கூட அரவணைக்கு மனிதர்! இவர் எப்போதும் அதிசய பிறவி தான்!!
திரைப்படங்களில் மட்டும் அல்ல, நிஜத்தில் கூட ஆன்மீகத்தை வெளிக்காட்டும் மனிதர்.

தமிழகத்தில் ஸ்ரீராகவேந்திரர் மற்றும் மகா அவதார் பாபாஜி மகான்களை அறிமுக படுத்தியவர் ரஜினிகாந்த் அவர்கள் தான். நெற்றியில் திருநீறு அணிந்த முதல் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தான்!
எளிமையான உடையும், வேகமான நடையும் ரஜினிகாந்த் அவர்களின் மிக சிறந்த அடையாளங்கள்! அவர் திரையில் மட்டும் அல்ல, குணத்திலும் சூப்பர் ஸ்டார் தான்!

Also Read : அந்த காலத்திலேயே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்ட நடிகர்.. நிலைத்து நின்ற ரஜினிகாந்த்

இந்த ஒரு விஷயம் இந்தியாவில் ஏன் உலக அரங்கிலேயே ரஜினிகாந்துக்கு மட்டுமே இருப்பதால் அன்றிலிருந்து இன்று வரை வயதாகியும் சூப்பர் ஸ்டார் ஆகவே இருந்து வருகிற. தற்போது இளம் ஹீரோக்கள் மத்தியில் போட்டி போட்டு அவர்களுக்கு நிகராக சம்பளத்தையும் பெற்று வருகிறார் இது யாராலும் செய்ய முடியாத ஒன்று.

இனிமேல் இப்படி ஒரு கதாநாயகன் வருவாரா என்பது தெரியாது அப்படி வந்தாலும் இவர் அளவுக்கு இந்த வயதில் தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் கூட புகழ்பெற முடியுமா என்பது சந்தேகம். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் ரஜினிகாந்த்

Also Read : பல பேர் கெஞ்சியும் வழிவிடாத ரஜினிகாந்த்.. இன்று வரை ஏக்கத்தில் இருக்கும் திரையுலகம்

Trending News