ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சந்தானம் முதல் தமன்னா வரை ஈஷா செல்வதன் ரகசியம்.. பாதாளம் வரை பாயும் ஜக்கி வாசுதேவ்

Sathanam : ஆன்மீக குருவான ஜக்கி வாசுதேவ் கோவையில் ஈஷா மையத்தை நடத்தி வருகிறார். அங்கு தினம் தோறும் ஏராளமான ரசிகர்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர்.

மகா சிவராத்திரி அன்று இலட்சக்கணக்கானோர் சிவனை வந்து வழிபட்டு செல்வார்கள். குறிப்பாக செல்வந்தர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அன்றைய தினம் கோவை ஈஷா மையத்தில் பார்க்க முடியும்.

இந்த வருட சிவராத்திரியில் சந்தானம், தமன்னா போன்ற சினிமா பிரபலங்கள் பலரும் கோவை வந்து ஈஷா மையத்தில் சிவனை வழிபட்டு இருந்தனர். அதிலும் குறிப்பாக சந்தானம் பக்தியில் தன்னையும் மீறி கண்ணீர் வீட்டு பிரார்த்தனை செய்தார்.

ஈஷா மையத்தின் ரகசியம்

அதேபோல் கடந்த வருடம் சிவராத்திரியில் சமந்தா போன்ற நடிகைகளும் கலந்து கொண்டனர். இதுகுறித்து சினிமா விமர்சகர் அந்தணன் பேசுகையில் பணம் பாதாளம் வரை செல்லும்.

அந்த வகையில் சந்தானம் முதல் தமன்னா வரை ஜக்கி பைனான்ஸ் கொடுக்கிறார் போல என அந்தணன் வினவி உள்ளார். அதனால் தான் சினிமா நட்சத்திரங்கள் ஈஷா மையத்தில் குவிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக ரஜினி ஈஷா மையத்திற்கு செல்லாததை பாராட்டியே ஆக வேண்டும். ராகவேந்திரனின் தீவிர பக்தனாக இருக்கும் ரஜினி ஆன்மீக வழியில் செல்ல போவதாக கூறினார். ஆனால் ரசிகர்களின் கோரிக்கை ஏற்று அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார்.

மற்ற பிரபலங்கள் அங்கு செல்வதற்கு முக்கிய காரணம் இருப்பதாகவும் யூடியூப்பில் சினிமா விமர்சகர் அந்தணன் கூறியுள்ளார். இவர் சொன்னது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News