
Rajini : லோகேஷின் பிறந்தநாள் அன்று கூலி டீசர் வரும் என ரஜினி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் சன் பிக்சர்ஸ் கூலி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டிருந்தது.
திருப்பதி லட்டு கிடைக்கலைன்னா என்ன பழனி பஞ்சாமிர்தம் கிடைச்சது என்று ரசிகர்கள் ஆறுதல் அடைந்து கொண்டனர். ஆனால் கூலி டீசர் வராததற்கு அஜித்தின் குட் பேட் அக்லி படம் தான் காரணமாம்.
அதாவது கூலி டீசர் வெளியிடலாம் என்ற தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. ஒரே நேரத்தில் இரண்டு நடிகர்களின் வீடியோக்கள் வெளியிட்டால் சொல்லவா வேண்டும்.
கூலி டீசர் வெளியாகாததற்கான காரணம்
சோசியல் மீடியாவில் இரு தரப்பு ரசிகர்களும் அடித்துக் கொள்வார்கள். அதுவும் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் ராக்கெட்டை விட வேகமாக மக்களிடம் செல்கிறது.
குறிப்பாக நல்ல செய்தியை விட கெட்டது தான் அதிகமாக பரவி வருகிறது. ஆகையால் ஒரே நாளில் இந்த வீடியோக்கள் வெளியிட்டால் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே ஒரு உலகப்போரே நடக்கும்.
இதை யோசித்து தான் லோகேஷ் வேறு ஒரு நாளில் கூலி டீசரை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறார். அவரது முடிவை தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் விரைவில் ரஜினி ரசிகர்களை திக்கு முக்காட செய்ய டீசர் வர உள்ளது.