
Trisha : திரிஷா தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த அவருக்கு மார்க்கெட் குறைய தொடங்கியது.
இதனால் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். ஆனாலும் பட வாய்ப்பு இல்லையே என்று ஹீரோயின் தவிர மற்ற கதாபாத்திரங்களில் திரிஷா நடித்ததில்லை. அதுதான் அவருக்கு பிளஸாக அமைந்தது.
பொன்னியின் செல்வன் மூலம் திரும்ப தமிழ் சினிமாவுக்கு வந்த திரிஷாவுக்கு பெரிய நடிகர்களுடன் அடுத்தடுத்த பட வாய்ப்பு வந்தது. விஜய், அஜித் என மாறி மாறி ஜோடி போட்டு வந்தார்.
திரிஷாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு வருவதற்கான காரணம்
ஆனால் விடாமுயற்சிக்கு அடுத்ததாக அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா தான் கதாநாயகி. ஒரே காம்போ அடுத்தடுத்த வந்தால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும். ஆனால் அதில் வேறு கதாநாயகிகளை புக் செய்யாத காரணமும் இருக்கிறது.
அந்த படத்தில் பெரிய நடிகையை தான் போட வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்திருக்கிறார். நயன்தாரா போன்ற நடிகைகள் இயக்குனர்களிடம் அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என கண்டிஷன் போடுகின்றனர்.
இதை நயன்தாரா பட இயக்குனர் நேரடியாகவே கூறியிருக்கிறார். ஆனால் திரிஷா இயக்குனருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவர் நினைத்த மாதிரியே அந்த காட்சியை நடித்து கொடுக்கிறார். அதனால் தான் இப்போதும் அவருக்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வருகின்றது.
ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா, விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இதுவரை ஐந்து முறை அஜித்துடன் த்ரிஷா ஜோடி போட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.