வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

சிறகடிக்கும் சீரியலுக்கு கிடைத்த அங்கீகாரம்.. ஆட்ட நாயகனை வைத்து தயாராகி இருக்கும் 1500 எபிசோடு

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பெற்றிருக்கிறது. அதிலும் நாடகத்துக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சன் டிவி சீரியலை ஓரம் கட்டும் அளவிற்கு அனைத்தையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை அடைந்திருக்கிறது என்பது மிகவும் பாராட்டக்கூடியது. அதிலும் அர்பன் மற்றும் ரூரல் ஏரியாவில் 8.38 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் வரும் சீரியல்களிலேயே இந்த ஒரு சீரியலுக்கு தான் இந்த மாதிரியான ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் முத்துவின் எதார்த்தமான நடிப்பும் கதைகளமும் மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதை மாதிரி ரோகிணி சுற்றி பொய் பித்தலாட்டங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மறைத்து ஒரு நல்ல மனைவியாகவும் மருமகளாகவும் இருப்பது போல் நடித்துக் கொண்டு வருகிறார்.

ஒய்யாரத்தில் ஜொலிக்கும் ஆட்டநாயகன்

விஜயா, வந்த மருமகளை யார் பணக்காரர்களாக வசதியாக இருக்கிறாரோ அவருக்கு பணிவிடை பார்த்து அல்ப ஆசையை தீர்த்துக் கொள்கிறார். ஸ்ருதி மற்றும் ரவி தன் உண்டு தன் வேலை உண்டு என்பதற்கு ஏற்ப நடந்து கொள்கிறார்கள். அண்ணாமலை வீட்டில் நடக்கும் பஞ்சாயத்திற்கு நாட்டாமை பண்ணும் அளவிற்கு தீர்ப்பு சொல்லி வருகிறார்.

இதையெல்லாம் தாண்டி மீனா, வாக்கப்பட்ட குடும்பத்தில் நமக்கு மரியாதை இருக்குதோ இல்லையோ வீட்டு வேலைக்காரி ஆகவே இருந்து காலத்தை ஓட்டிவிட வேண்டும் என்று நடித்து வருகிறார். இடையில் கணவருக்கு ஏதாவது ஒரு அவமானம் பிரச்சனை என்றால் பொங்கவும் யோசிக்க மாட்டார். இப்படி ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் கதைகளை வைத்து சீரியல் நகர்ந்து வருகிறது.

இதனை தொடர்ந்து இன்னும் 1500 எபிசோடு காண கதைகள் தயாராகி இருக்கிறது. இந்த வகையில் எஸ் குமரன் இயக்கத்தில் ஆனந்த விகடன் தயாரிப்பில் ஏற்கனவே சன் டிவியில் திருமதி செல்வம் என்ற நாடகத்தை 1400 எபிசோடு கிட்ட கொண்டுவந்து மக்கள் மனதில் ஒரு தரமான இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் இவர்களுடைய கூட்டணி தொடர்ந்து விஜய் டிவியில் இப்பொழுது பயணம் செய்து வருகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்தாலே நிச்சயம் அது வெற்றி கூட்டணியாக தான் மாறும். அதற்கு உதாரணமாக தான் இப்பொழுது சிறகடிக்கும் ஆசை சீரியலுக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு கிட்டதட்ட 1500 எபிசோடு கிட்ட கொண்டு போக வேண்டும் என்று கதை தயாராகி இருக்கிறது.

ஆனால் இப்பொழுது ரோகிணி மாட்டாமல் எஸ்கேப் ஆகி கொண்டு வருவது சற்று கடுப்பாகி இருக்கும் பட்சத்தில் அதை உடனடியாக மாற்ற வேண்டும் என்பதற்காக மனோஜ் மூலமாக ரோகிணிக்கு அவமானம் ஏற்படுவது போல் கதை நகர்கிறது. இதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ரோகிணி மாற்றப் போகிறார். அந்த வகையில் தற்போது மனோஜ் பிசினஸ் பண்ணுவதற்கு ரோகிணி அப்பா மூலம் பணம் கிடைக்கவில்லை.

அண்ணாமலை பணத்தை திருடிட்டு போய் ஜீவாவிடம் ஏமாந்த பணத்தை மனோஜ் மற்றும் ரோகினி கைப்பற்றி விட்டார்கள். அந்த படம் மூலம் தான் பிசினஸ் தொடங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வரப்போகிறது. அப்படி மட்டும் நடந்தால் இன்னும் இந்த சீரியல் தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைத்துக் கொள்ளும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சிறகடிக்கும் ஆசை சீரியலின் சுவாரசியமான சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News