பிரபல ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த இசையமைப்பாளர் தான் ஹாரிஸ் ஜெயராஜ். இவரின் பின்னணி இசையும் மக்களின் ஆதரவை பெற்று வந்தது. அவ்வாறு ஒரு காலகட்டங்களில் பாடல்கள் இசையமைப்பதில் பிசியாக இருந்த இவர் தற்பொழுது வேறு தொழிலில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
ஏனென்றால் விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் துருவ நட்சத்திரத்திற்கு இவர் இசையமைத்திருந்தார். இதுவரை அப்படம் வெளிவராத நிலையில் வெறுத்துப்போன அவர் இப்போது தன் இசை பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார். அதை தொடர்ந்து புதிய தொழிலை தொடங்குவதாக சொல்லி தஞ்சாவூரில் புகழ்பெற்ற சிவாஜி அவர்களின் தியேட்டரை லீசுக்கு எடுத்தார்.
Also Read: ஒரு பட வாய்ப்பிற்காக போராடும் துருவ் விக்ரம்.. கால் கடுக்க நின்று அப்பாவைப் போல அவஸ்தைப்படும் மகன்
அதிலும் இப்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதாவது சிவாஜியின் தியேட்டர் எப்போது ஜிவி தியேட்டர் சிட்டி காம்ப்ளஸ் என்ற பரிமாற்றத்துடன் 5 ஸ்கிரீன்களை கொண்டு இயங்கி வருகிறது. மேலும் சாந்தி, கமலா, சிவாஜி, ஜீவி, ஜீவி கோல்ட் என்ற பெயரில் 4கே டால்பி7.1 ப்ரொஜக்ஷனில் படங்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் அதை லீசுக்கு எடுத்து நடத்தி வந்த ஹாரிஸ் ஜெயராஜின் உரிமை காலம் இப்போது முடிவடைந்துள்ளது. ஆனால் அதை மீண்டும் தொடர விருப்பம் கொண்ட அவர் அதை புதுப்பித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார். ஆனால் அதை உரிமையாளர்கள் நிராகரித்து விட்டார்களாம்.
Also Read: 5 வருடம் கிடப்பில் போட்ட படம் .. காஷ்மீரில் இருந்து கௌதம் மேனன் வெளியிட்ட தரமான ரிலீஸ் அப்டேட்
ஏனென்றால் தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனம் அதன் உரிமத்தை பெற்றிருக்கிறது. இருப்பினும் ஹாரிஸ் ஜெயராஜ் உதயநிதியிடம் பேசி அதை பெற்றுக் கொள்ளலாம் என்று நம்பி இருக்கிறார். ஆனால் அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக வேறு தியேட்டரை லீசுக்கு எடுத்து கொள்ளுங்கள் என்ற பதில் தான் கிடைத்ததாம்.
இசை வாய்ப்பும் சரிவராத நிலையில் புதிய தொழிலும் கைவிட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். மேலும் அந்த தியேட்டர் இப்போது தஞ்சாவூரில் வெகு பிரபலமாக இருப்பதால் அதில் வருமானமும் எக்கச்சக்கமாக கிடைக்கிறது. அதனாலேயே இப்போது இந்த போட்டி நிலவி வருவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read: ‘கங்குவா’ என்னன்னு தெரியுமா? தயாரிப்பாளர் கொடுத்த சுடச்சுட அப்டேட்டால் மிரளும் திரையுலகம்