Actor Vijay: இப்போது இணையத்தையே அல்லோலப்படுத்துவது லியோ படத்தின் அப்டேட்டுகள் தான். நாளுக்கு நாள் இந்த படத்தைப் பற்றி ஒவ்வொரு செய்திகள் உலாவிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் லியோ படத்தில் உள்ள உறவு முறைகள் எப்படி லோகேஷ் அமைத்துள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி இந்த படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்து இருக்கிறார்கள். இதில் முக்கிய வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பிரபலங்கள் நடிப்பதாக தகவல் வெளியானது. பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கும் விஜய்க்கும் ரத்த சொந்த உறவை ஏற்படுத்தியிருக்கிறார் லோகேஷ்.
Also Read : லியோ பிளாஷ்பேக் காட்சியில் ஏற்பட்ட ட்விஸ்ட்.. புது என்ட்ரி கொடுக்கும் பிரேமம் நடிகையின் போட்டோ
அதாவது விஜய்யின் அப்பாவாக சஞ்சய் தத் லியோ படத்தில் நடிக்கிறார். மேலும் தளபதியின் நண்பராக ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கிறார். அர்ஜுனின் மனைவியாக மடோனா செபஸ்டின் நடித்து வருகிறார். விஜய்யின் மனைவியாக த்ரிஷா மற்றும் மகளாக பிக் பாஸ் ஜனனி நடிக்கின்றனர்.
மேலும் நடிகர் கதிர், பிக் பாஸ் அபிராமி மற்றும் பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். மாஸ்டர் படத்தை போல் லோகேஷ் லியோ படத்திலும் கேமியோவில் வர இருக்கிறார். லியோ படத்தின் இன்ட்ரோ பாடலில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், மடோன் செபஸ்டின் ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.
Also Read : சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி தடுக்கிறாரே! லியோவால் வெங்கட் பிரபுவுக்கு ஏற்பட்ட தலைவலி
அதன் பிறகு பிளாஷ்பேக் காட்சிகள் இறுதியில் தொடங்க இருக்கிறது. அப்போது தனது அப்பா தான் வில்லன் என்பதை அறிந்து சஞ்சீவ் மற்றும் அவரது கும்பலுடன் மோதுகிறார் லியோ விஜய். மேலும் லியோ படத்துடன் லோகேஷ் எண்டு கார்டு போடாமல் இதையும் ஒரு தொடர்ச்சியாக எடுக்க தான் திட்டமிட்டு இருக்கிறாராம்.
ஆகையால் லியோ படத்திலும் நிறைய சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு படத்தில் சரத்குமார் அப்பாவாக நடித்த நிலையில், இப்போது சஞ்சய் தத் அப்பாவாக நடிக்கிறார் என்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தைப் பற்றிய அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.
Also Read : அரசியலில் பதம் பார்க்க லியோவை பகடைக்காயாக யூஸ் பண்ணும் விஜய்.. வாயடைத்து போய் நிற்கும் லோகேஷ்