சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

குமரேசனை ஓரம் கட்ட வரும் பெருமாள் வாத்தி.. விடுதலை 2வில் உள்ள சுவாரஸ்யம், ரிலீஸ் எப்ப தெரியுமா?

Viduthalai 2: வெற்றிமாறனின் விடுதலை படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த ரசிகர்களின் கவனத்தை பெற்றது. காமெடி நடிகராகவே பார்க்கப்பட்ட சூரியின் வித்தியாசமான பரிமாணம் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வருகிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டாலும் முதல் பாகத்தை விட கூடுதல் சுவாரஸ்யம் கொண்டுவர வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை மெனக்கெட்டு எடுத்து வருகிறார் வெற்றிமாறன். அந்த வகையில் சூரி குமரேசனாக நடித்த நிலையில் பெருமாள் வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

Also Read : சூர்யாவை டீலில் விட்டாரா வெற்றிமாறன்.? வருஷ கணக்கில் காக்க வைத்த வாடிவாசல், எதிர்பாராத ஷாக்

முதல் பாகத்தில் இவரது காட்சி குறைவானாலும் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியை சுற்றி தான் முழு படமும் நகர இருக்கிறதாம். ஆகையால் விஜய் சேதுபதியின் காட்சிகள் அதிகமாக்கப்பட்டு உள்ளது. மேலும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 30-ஆம் தேதி சிறுமலையில் நடந்தது.

மேலும் 40 நாட்கள் படப்பிடிப்பு இன்னும் மிச்சம் உள்ளதாம். அவற்றை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய இடங்களில் படமாக்கும் திட்டத்தில் படக்குழு உள்ளது. இதைத்தொடர்ந்து படத்தில் பின்னணி வேலைகள் உள்ளது. ஆகையால் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி விடுதலை 2 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

Also Read : அவதாருக்கே டஃப் கொடுக்க போகும் வெற்றிமாறன்.. உச்சகட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்த விடுதலை 2

மேலும் பெரிய நடிகர்களின் படங்கள் ஆன ரஜினியின் ஜெயிலர் இப்போது வெளியாகிவிட்டது. அதேபோல் விஜய்யின் லியோ படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில், கமலின் இந்தியன் 2 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் வெளியாகிறது. ஆகையால் ஜனவரி 26 ஆம் தேதியை டார்கெட் செய்து விடுதலை 2 படத்தை வெளியிடுகிறார்.

மேலும் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில் விடுதலை 2 படத்தை விரைந்து முடித்துக் கொடுக்க வெற்றிமாறன் கூறி இருக்கிறாராம். ஆகையால் இப்போது முழு கவனத்தையும் இந்த படத்தில் தான் செலுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தையும் விரைவில் தொடங்க இருக்கிறார்.

Also Read : கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.. விஜய் சேதுபதியை வழிக்கு கொண்டு வந்த வெற்றிமாறன்

Trending News