ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

டைட்டிலுடன் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. அனல் பறக்கும் அடுத்த அப்டேட்

வம்சி பைடிபைலி இயக்கத்தில் விஜய் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குடும்ப சென்டிமென்ட் மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. மேலும் விஜய்யின் அப்பாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். மேலும் ராஷ்மிகா மந்தனா, ஷாம் மற்றும் பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்புக்காக படக்குழு ஹைதராபாத் சென்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் தளபதி 66 படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தனது படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எப்போதும் அவர் பிறந்த நாளன்று வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல் தளபதி 66 படத்தின் போஸ்டரும் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் இப்படத்தின் டைட்டில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இது எல்லாமே வருகிற ஜூன் 21ஆம் தேதி ரசிகர்களுக்கு தெரிய வர இருக்கிறது. மேலும் தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் ஒரு பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது.

தளபதி 66 படத்தில் சண்டைக்காட்சிகள் அவ்வளவாக இருக்காது என்றும் முழுக்க முழுக்க சென்டிமென்ட் கலந்த குடும்பப் படமாக இருக்கும் என கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்ற பெரிய கேள்விக் குறி எழுந்துள்ளது.

அதாவது விஜய் நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் பின்னி பெடல் எடுக்க கூடியவர். ஆனால் இந்த படத்தில் பெரிதும் சண்டைக் காட்சிகள் இல்லாதது விஜய் ரசிகர்களை அதிருப்தியில் ஏற்படுத்தக்கூடும். எதுவாக இருந்தாலும் விஜய் படம் வசூல் சாதனை படைப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News