ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வாக்கு தவறிய கௌதம் மேனன்..! பஞ்சாயத்த முடிக்க மட்டும் போடும் வேஷம்

The release of Gautham’s Dhruva Natchathiram has been delayed: தமிழ் சினிமாவில் நாயகனை ஆக்சன் ஹீரோவாகவும் அவன் காதலை மென்மையாகவும், ஸ்டைல் ஆகவும் தனது படங்களில் வெளிப்படுத்தி தனக்கென தனி முத்திரை பதித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இயக்குனராக இருந்தவர் நடிகராகவும் சில படங்களில் தனது திறமையை  வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டிருக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கௌதம் மேனனின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள படம் துருவ நட்சத்திரம். மென்மையான காதல் மற்றும் அதிரடி ஆக்சன் உடன்  தரமான த்ரில்லர் கதையில் நாட்டை காப்பாற்றும் உளவாளியாக விக்ரம் நடித்துள்ளார். ரசிகர்கள் துருவ நட்சத்திரத்தை ஆவலுடன் எதிர் நோக்க படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடித்துக் கொண்டே வருகிறது.

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தாமதிக்க காரணம் இவரது படங்களுக்காக இவர் வாங்கிய கடனே  ஆகும். நவம்பர் மாதம் ரிலீஸ் செய்வதாக இருந்த நிலையில் துருவ நட்சத்திரம் வெளி வராதபடி கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு சென்று கடன் தொகையை செலுத்தாமல் படத்தை ரிலீஸ் பண்ண கூடாது என்று உத்தரவு வாங்கினர்.

Also read : பணத்தாசையால் வெறும் போஸ்டரை வைத்து கடனாளியான கௌதம் மேனன்.. ஒரே படத்தால் முடியும் கேரியர்

கௌதம் மேனனின் ரசிகர்களும் துருவ நட்சத்திரம் எப்போது ரிலீஸ் ஆகும் என நச்சரிக்க, டிசம்பர், ஜனவரி என காலக்கெடு வைத்தார் கௌதம். இதற்கிடையே விடுதலை, லியோ, பத்து தல என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார் கௌதம். துருவ நட்சத்திரத்திற்கு வாங்கிய கடனை செலுத்தி இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்காகவே நடிப்பதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இவ்வாறு கடின உழைப்புடன் கலைஞனாக தன்னுடைய படைப்பை  வெளி உலகத்துக்கு தெரிவிக்க படாத பாடு பட்டு வரும் கௌதம் பிப்ரவரியில் துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகும் என்றும் இதற்கான ரிலீஸ் உரிமைகளை கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு விற்றார். அவர்களும் இதை நம்பி மொத்தமாக தொகையை கொடுத்து அக்ரீமெண்ட் போட்டு வாங்கி உள்ளனர்.

நீதிமன்றத்தில் எல்லா கடனும் பிப்ரவரியில் செட்டில் பண்ணி இதே மாதத்தில் ரிலீஸ் செய்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ரசிகர்களிடமும் துருவ நட்சத்திரம் வெளியாவது பற்றி இப்போ, அப்போ என அப்டேட் கொடுத்த நிலையில் படத்தின் உரிமையை ஓடிடியிலும் விற்க முடியாமல் ரிலீஸ் செய்யவும் முடியாமல் மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்துள்ளார் கௌதம்.

Also read : ஏழு ஜென்மம் எடுத்தாலும் விஜய் கூட இனி சேரவே முடியாத 5 இயக்குனர்கள்.. போஸ்டரே வெளியிட்டு பல்பு வாங்கிய கௌதம் மேனன்

Trending News