புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சூரியை நடு ரோட்டில் விட்ட ரெண்டு பேர்.. இப்படியா ஆசை காட்டி மோசம் பண்றது

வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டவர் சூரி. ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் இப்படத்திற்கு பிறகு அதிக படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இவர் நடிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன், சூரி கூட்டணியில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. ரஜினியின் அண்ணாத்தா படத்திலும் சூரி நடித்திருந்தார்.

சினிமாவில் காமெடி நடிகர்கள் ஹீரோவாக அவதாரம் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் வடிவேலு, சந்தானம், யோக பாபு ஆகியோரை தொடர்ந்து தற்போது சூரி விடுதலை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சூரியை பல ஆசைகளை காட்டி அவரையும் சிக்ஸ்பேக் வைத்து ஹீரோவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் வெற்றிமாறன். சரி ஆசைப்பட்டுவிட்டார், கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் ரிலீசுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார் சூரி. ஆனால் படம் இன்னும் முடிந்தபாடில்லை.

ஒரு பக்கம் விடுதலை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி வேற படங்களில் ரொம்ப பிசியாக இருக்கிறார். இதனால் விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைக்காததால் படத்தை முடித்துக் கொடுக்க முடியவில்லை. இதனால் சூரி தான் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். அந்த மனிதன் காமெடி செமையா பண்ணிக்கொண்டு இருந்தார்.

அதுவும் பல படங்களில் பிஸியாக இருந்தார், அவரையும் ஹீரோ ஆசை காட்டி மாட்டிவிட்டுள்ளனர். விடுதலை படம் வெளியான பிறகுதான் சூரிக்கு இப்படம் கை கொடுக்கிறதா என்பதைப் பார்க்க முடியும். இப்படத்தை தொடர்ந்து அவர் ஹீரோவாகவே நடிக்கிறாரா அல்லது நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News