Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பொய்ப் பித்தலாட்டங்களை பண்ணி பாண்டியன் வீட்டிற்கு மருமகளாக வந்த தங்கமயில் ஆட்டம் ஓவராக இருக்கிறது. அத்துடன் மாமனாரை கைக்குள் போட்டு விட்டால் எல்லாத்தையும் சாதித்து விடலாம் என்று தங்கமயில் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆப்பு வைத்து வருகிறார்.
அந்த வகையில் மாமனாருக்கு ஜால்ரா அடிக்கும் விதமாக ராஜி டியூஷன் எடுத்ததை போட்டுக் கொடுத்து நல்ல பெயரை வாங்கி விட்டார். அதோடு விடாமல் தற்போது மீனா மற்றும் செந்தில் இருவரும் சேர்ந்து சென்னையில் பார்க் பீச் போன்ற இடங்களில் சந்தோசமாக இருக்கும் விஷயத்தையும் போட்டுக் கொடுத்து விடுகிறார்.
தங்கமயிலுக்கு ஜால்ரா அடிக்கும் பாண்டியன்
அதாவது மீனா அங்கு சந்தோசமாக இருக்கும் புகைப்படத்தை ராஜிக்கு அனுப்பி வைக்கிறார். இதை பார்த்த சந்தோஷத்தில் ராஜி, மாமியார் கோமதியிடமும் போட்டோவை காட்டுகிறார். அதை பார்த்துக் கொண்டிருந்த பொழுது தங்கமயில் எனக்கும் காட்டுங்கள் என்று போனை வாங்கி பார்க்கிறார்.
அதில் மீனா மற்றும் செந்தில் சந்தோஷமாக இருப்பதை பார்த்ததும் தங்கமயில் முகம் வாடிவிட்டது. பொறாமையில் மூஞ்சியை தொங்க போட்டுவிட்டார். பிறகு வீட்டிற்கு வந்த பாண்டியன், கோமதி இடம் செந்திலுக்கு போன் பண்ணா சுவிட்ச் ஆப்னு வருது. மீனா உனக்கு ஏதாவது போன் பண்ணாளா என்று கேட்கிறார்.
அதற்கு கோமதி ஃபோன் பண்ணவில்லை என்று சொல்லி அடுத்த வார்த்தையை சொல்ல வருவதற்குள் முந்திரிக்கொட்டை மாதிரி தங்கமயில் முந்தி கொண்டார். அதாவது மீனா போன் பண்ண வில்லை மாமா, ஆனால் செந்தில் உடன் பீச்சுக்கு போன போட்டோவை அனுப்பி வைத்திருக்கிறார் என்று எதுவுமே தெரியாத பாப்பா போல் அனைத்தையும் பாண்டியனிடம் விளக்கி விட்டார்.
உடனே புத்தி கெட்ட பாண்டியன் வழக்கம்போல் கோமதியை திட்டுகிறார். வர வர இந்த வீட்டில் நடக்கிற எந்த விஷயத்தையும் சொல்வதே கிடையாது. இப்படிதான் ராஜி டியூஷன் எடுத்ததையும் மறைத்தாய், இப்பொழுது மீனா விஷயத்தையும் சொல்லவில்லை என்று கோமதியை திட்டுகிறார்.
இதை பார்த்து கடுப்பான ராஜி, தங்கமயிலிடம் நல்லது நினைச்சு நீங்க பண்றது எல்லா விஷயமும் தேவையில்லாதது தான். எல்லா விஷயத்தையும் அவசரப்பட்டு பேசி காரியத்தை கெடுத்து விடாதீர்கள். இனி உங்கள் வேலை மட்டும் பார்த்து கொள்ளுங்கள் என்று தங்கமயிலை சரமாரியாக ராஜி தாக்கி விட்டார். இதனைக் கேட்டு வழக்கம் போல் தங்கமயில் நீலி கண்ணீர் வடிக்கிறார்.
பிறகு இதுதான் சான்ஸ் என்று புருஷன் சரவணன் இடமும் மாமனார் பாண்டியனிடமும் வத்தி வைக்கப் போகிறார். அதில் பாண்டியன் நான் கூட்டிட்டு வந்த மருமகளை நீ எப்படி நோகடிக்கலாம் என்று மறுபடியும் ருத்ரதாண்டவம் ஆடப்போகிறார். அந்த வகையில் எப்படியாவது தங்கமயிலின் ஆட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று ராஜி மீனா இருவரும் சேர்ந்து பதிலடி கொடுக்கப் போகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த முந்தைய சம்பவங்கள்
- Pandian Stores 2: ராஜியின் அண்ணன் சொதப்பியதால் அவஸ்தைப்பட போகும் பாண்டியன் குடும்பம்
- மருமகள் பேச்சை கேட்டு பொண்டாட்டியை வெளுத்து வாங்கும் பாண்டியன்
- ராஜிக்கு எதிராக பாண்டியனிடம் பேசிய தங்கமயில்