வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

உதயநிதியை தாக்கியதால் விஷாலுக்கு மறைமுகமாக கொடுத்த ரெட் கார்டு.. தயாரிப்பாளர் சங்கத்துக்கு விட்ட சவால்

Vishal and Udhayanidhi: நடிகர் விஷால் நடிக்கும் படங்கள் வெற்றியோ தோல்வியோ, அது இரண்டாம் பட்சம் தான். ஆனால் தவளை தன் வாயாலேயே கெடும் என்று சொல்வதற்கு ஏற்ப விஷால் அவருடைய துடுக்குத்தனமான பேச்சால் பல சிக்கல்களில் தவித்து பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். அப்படித்தான் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாவிற்குள் அரசியலைக் கொண்டு வராதீர்கள்.

சினிமாவை வைத்து அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்று ஓட்ட பந்தயம் வைப்பதற்கு இது ஒண்ணும் அரசியல் இல்லை. அது வேற இது வேற என்று பிரித்துப் பார்த்தால் எல்லோருக்கும் நல்லது என்று பேசி இருந்தார். ஆனால் இவர் இப்படி பேசியது முழுக்க முழுக்க ஆளும் கட்சியாக இருக்கும் உதயநிதியை தான் தாக்கி பேசி இருக்கிறார் என்று அனைவருக்கும் அப்பட்டமாக புரிந்து விட்டது.

ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்த விஷால்

அந்த வகையில் உதயநிதி, நேரடியாக விஷாலை எதுவும் செய்யாமல் மறைமுகமாக ரெட் கார்டு கொடுத்து செக் வைத்திருக்கிறார். அந்த வகையில் 2017 முதல் 2019 வரை விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருந்த பொழுது தமிழ் ராக்கர்ஸ் அட்மினை கண்டுபிடித்து திரை உலகில் இருக்கும் தலைவலியை அகற்றுவேன் என்று கிட்டத்தட்ட 12 கோடி அளவில் முறைகேடு நடத்திருக்கிறார்.

அந்த வகையில் இந்த ஒரு விஷயம் தற்போது கிளரும் விதமாக இதற்கான காரணத்தையும், அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் அசால்ட் ஆக முறைகேடு செய்ததையும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் நடிகர் விஷால் நடிக்கும் புது படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் வந்து கலந்து ஆலோசித்த பின்னரே பணிகளை துவங்க வேண்டும் என்று தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்து இருக்கிறது.

இதற்கு விஷால் அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டது என்னவென்றால் அந்த பணத்தை முறைகேடு பண்ணவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் நலிந்த மூத்த உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு, நலப் பணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கான கல்வி உட்பட நலனுக்காக பயன்படுத்தப்பட்டது தான், இது அனைத்துமே அப்பொழுது இருந்த நபரும் இப்பொழுது பதிவில் இருப்பவர்களுக்கும் தெரியும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேலும் நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். இதற்கு முன் எந்த படங்களையும் தயாரிக்காத தயாரிப்பாளர்களும், எதிர்காலத்திலும் தயாரிக்காமல் வெறும் தயாரிப்பாளர்கள் என சொல்லிக் கொள்பவர்களும் முடிந்தால் என்னை தடுத்து நிறுத்திப் பாருங்கள் என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கே சவால் விடும் அளவிற்கு நடிகர் விஷால் ஆக்ரோஷமாக பேசி இருக்கிறார்.

சர்ச்சையை கிளப்பிய விஷால்

- Advertisement -spot_img

Trending News