வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மகா சங்கமத்தில் அரங்கேற்றிய திருட்டு.. நிலைகுலைந்து போன சிவகாமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இரண்டு தொடர்களை இணைந்து ஒரு மணி நேரம் மகா சங்கமம்மாக ஒளிபரப்பாகும். அந்த வகையில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 தொடர்கள் இணைந்து மகா சங்கமமாக இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் இந்த வார விஜய் டிவி டிஆர்பி எகிரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதி, கண்ணம்மா இருவரும் குடும்பமாக சிவகாமி ஊருக்கு வருகின்றனர். சிவகாமி குடும்பத்தில் ஏற்கனவே மிகப்பெரிய சண்டை போய்க் கொண்டிருக்கிறது. சந்தியா போலி சாமியாரை கண்டுபிடித்து அவர் மீது வழக்கு கொடுத்துள்ளார். ஆனால் சிவகாமி அந்த வழக்கை வாபஸ் வாங்க சொல்லி வற்புறுத்துகிறார்.

ஆனால் சரவணன் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். மீண்டும் அந்த சாமியார் வருகையால் ஊரே திரண்டிருக்கிறது. அப்போது பண்ண பாவத்திற்கு பரிகாரமாக சாமிக்கு அலங்காரம் செய்து பூஜை செய்ய வேண்டும் என அந்த சாமியார் கூறுகிறார். இதனால் சந்தியாவுடன் இணைந்த கண்ணம்மாவும் சாமியை அலங்காரம் செய்கிறார்.

அப்போது சாமியின் திரை திறக்கப்படும் போது சாமியின் மேல் அணியப்பட்டிருந்த நகைகளை காணவில்லை. இதைப் பார்த்து அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது அந்த சாமியார் தீபாராதனை காட்டும்போது யார் இந்த நகையைத் திருடியது என்பதை கடவுளே காட்டிக்கொடுக்கும் என்கிறார்.

இதனால் சந்தியா மற்றும் கண்ணம்மா இருவரும் தீபாராதனை காட்டுகின்றனர். அதன் பின்பு சிவகாமி தீபாராதனை காட்டும்போது சாமி சிலையில் உள்ள கண்களிலிருந்து ரத்தம் வருகிறது. இதனால் அந்த சாமியார் நகையை திருடியது சிவகாமி தான் என ஊர் முன்னிலையில் கூறுகிறார்.

இதைக் கேட்டு சிவகாமி அதிர்ச்சியில் நிலை குலைந்து போகிறார். அதன் பிறகு கண்ணம்மா மற்றும் சந்தியா இருவரும் சேர்ந்து இந்த சாமியார் போலி தான் என்பதை ஊருக்கு புரியவைக்க உள்ளனர். இதனால் சிவகாமி மீண்டும் தான் செய்தது தவறு என சந்தியாவை ஏற்றுக் கொள்வார்.

Trending News