வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கிட்டத்தட்ட டைட்டிலை முடிவு செய்த தளபதி 66 டீம்.. அவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதை

வம்சி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் தளபதி 66 திரைப்படத்தில் விஜய் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, குஷ்பூ, சங்கீதா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இவ்வளவு நட்சத்திர கூட்டம் இருக்கும் போதே படம் குடும்ப சென்டிமென்ட் கதையாகத்தான் இருக்கும் என்று யூகிக்கப்பட்டது. அதன்படியே இந்தப்படம் வழக்கமாக வரும் விஜய் படத்தை போன்று ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் முழுக்க முழுக்க குடும்ப பின்னணியை சுற்றியே எடுக்கப்பட்டு வருகிறதாம்.

இதன் மூலம் விஜய்யின் ரசிகர்கள் நீண்ட காலங்களுக்கு பிறகு அவரை ஒரு வலுவான சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் காண இருக்கின்றனர். இதுவே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் பற்றிய ஒரு தகவல் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது.

அதாவது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் தளபதி 66 படத்தின் டைட்டிலை அறிவிக்க இருக்கின்றனர். ஆனால் அதற்கு முன்பே படத்திற்கு வாரிசு என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இதனால் இந்த தலைப்பு குறித்து பல்வேறு கதைகள் தற்போது பேசப்பட்டு வருகிறது.

அதில் விஜய் அரசியலுக்கு வருவதை குறிக்கும் பொருட்டு தான் இப்படி வாரிசு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முழு அர்த்தம் அரசியல் வாரிசு என்றும் ஒரு கட்டுக்கதை தற்போது வேகமாக பரவி வருகிறது. ஆனால் உண்மையில் இதற்கும் படத்தின் தலைப்புக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

உண்மையில் இந்தப் படம் தந்தை மற்றும் மகனுக்கு இடையே இருக்கும் உறவை பற்றி தான் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாகத்தான் வாரிசு என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியில் எந்தவிதமான அரசியல் காரணமும் இல்லை என்று படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

Trending News