வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

போண்டா மணியின் பெயருக்கு பின் சோகமான மறுபக்கம்.. பசியும் பட்டினியமாய் இருந்த கேத்தீஸ்வரன்

Bonda Mani Another Sad Side: காமெடி நடிகர் போண்டா மணி கிட்டத்தட்ட 270 படங்களுக்கு மேல் சின்ன சின்ன காமெடி கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் அவருக்கென்று ஒரு இடத்தை பதிவு பண்ணி இருக்கிறார். முக்கியமாக வடிவேலு மற்றும் விவேக் உடன் சேர்ந்து நடித்த படங்கள் இவரை அதிக அளவில் தூக்கி நிறுத்திருக்கிறது. அப்படிப்பட்ட இவர் நேற்று இரவு திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்தபடியே இறந்திருக்கிறார்.

இந்த செய்தியை கேட்ட பலரும் இவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இவருடைய ஒரிஜினல் பெயரான கேத்தீஸ்வரன் பெயருக்கு பதிலாக போண்டா மணி பெயர் எப்படி வந்தது என்று சோகமான மறுபக்கத்தின் விஷயங்கள் வெளியாயிருக்கிறது. அதை பற்றி தற்போது பார்க்கலாம்.

அதாவது இவர் சினிமாவிற்குள் வருவதற்கு முன் சிங்கப்பூரில் வேலை பார்த்திருந்திருக்கிறார். அங்கே ஒரு நிகழ்ச்சிக்காக பாக்கியராஜ் சென்றிருக்கிறார். அப்பொழுது போண்டா மணிக்கும் பாக்கியராஜுக்கும் ஏற்பட்ட பழக்கத்தினால் சினிமாவில் நடிப்பதற்காக போண்டாமணி சென்னைக்கு வந்திருக்கிறார். அதன் மூலம் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த பவுனு பவுனுதான் படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

Also read: போண்டா மணி காமெடியில் கலக்கிய 5 படங்கள்.. மாப்பிள்ளையை ஜோக்கர் ஆக்கிய வடிவேலு

அதன்பின் இவருக்கு சின்ன சின்ன கேரக்டர்கள் தான் தேடி வந்திருக்கிறது. இதனால் பெருசாக அவரால் சம்பாதிக்க முடியவில்லை. அப்பொழுது ஒருவேளை சோற்றுக்காக காசு இல்லாமல் கஷ்டப்பட்டு பசியும் பட்டினியமாக இருந்திருக்கிறார். ஆனாலும் கிடைக்கிற ஒரு சில கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற என்பதற்காக பசியை ஆற்றுவதற்காக அவரிடம் இருந்த பணத்தை வைத்து போண்டாவை மட்டும் வாங்கி சாப்பிட்டு வயிற்றை நிரப்பி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து கிடைக்கும் கதாபாத்திரங்களில் இவருடைய பெயர் கொஞ்சம் காமெடி கலந்த பெயராக இருக்க வேண்டும் என்ற ஒரு ஆசையில் இவருக்கு மிகவும் பசியாற்றிய ஒன்று போண்டா. அத்துடன் காமெடியில் இவருக்கு குருவாக இருந்தவர் கவுண்டமணி. அதனால் இவர் மீது இருந்த அதீத ஒரு பாசத்தால் மணி என்ற பெயரையும் சேர்த்து போண்டா மணி என்று வைத்துக் கொண்டார்.

பின்னர் இதுவே அடையாளமாக மாறி இவருடைய ஒரிஜினல் பெயரான கேத்தீஸ்வரன் பெயர் யாருக்கும் தெரியாத அளவிற்கு போய்விட்டது. அப்படிப்பட்ட இவர் வடிவேலுவுடன் நடித்த காமெடி காட்சிகளான கல்யாணத்தை நிறுத்துவதற்கு சீப்பை ஒழித்து வைக்கும் ஐடியா கொடுத்தது, போலீஸிடம் வடிவேலுவை சிக்க வைப்பதற்காக யார் கேட்டாலும் உண்மையை சொல்லிடாதீங்க என்ற வசனமும் இவரை தூக்கி நிறுத்தியது.

Also read: நடிகர் போண்டா மணி திடீர் மரணம்.. 270 படங்களுக்கும் மேல் நடித்த காமெடி நடிகர்

Trending News