வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ராம் பிக் பாஸில் வாங்கிய சம்பளம்.. ரகுவரன் கெட்டபுக்காகவே வாரி வழங்கிய விஜய் டிவி

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 7 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேறிய நிலையில் நேற்று சனிக்கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு ராம் வெளியேறினார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதாவது மாடலாக இருக்கும் ராம் ராமசாமி ஆரம்பத்தில் எந்த போட்டியிலும் ஈடுபாடு இல்லாமல் காணப்பட்டார். மேலும் முதல் இரண்டு வாரங்களிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் கிட்டத்தட்ட 8 வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடித்துள்ளார்.

Also Read : விஜய் டிவி முடிவு செய்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. மக்கள் மனசுல இருக்கிறத உளறி கொட்டிய பிரியங்கா

இந்நிலையில் கடைசி வாரம் தான் ராம் தனது முழு திறமையையும் காண்பித்துள்ளார். அதாவது ஒவ்வொருவருக்கும் கடந்த வாரம் ஒவ்வொரு கெட்டப் கொடுக்கப்பட்டது. அதில் முதல்வன் ரகுவரன் கெட்டப் ராமுக்கு கொடுத்திருந்தனர். அந்தக் கதாபாத்திரத்திற்கு கணக்கச்சிதமாக அவரது உடல்வாகு இருந்தது.

மேலும் அவரது பாடி லாங்குவேஜ், குரல், டைமிங்கில் காமெடி என அற்புதமாக ராம் நடித்திருந்தார். இவருக்கு இப்படி ஒரு திறமையா என பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் முழு திறமையும் காண்பிப்பதற்குள் எவிக்சன் ஆகி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

Also Read : சூர மொக்கையாக போகும் பிக் பாஸ் சீசன் 6.. சாட்டையுடன் என்ட்ரி கொடுக்க போகும் ஆண்டவர்

இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராம் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ராமுக்கு 15,000 முதல் 20,000 வரை பிக் பாஸ் சம்பளம் கொடுத்துள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 60 நாட்கள் பயணித்த ராமுக்கு குறைந்தபட்சம் 9 லட்சத்திற்கு அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும் ரகுவரன் கெட்டப்பில் அசத்தியதற்காக ராமுக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளது விஜய் டிவி. மேலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் இன்றைய எபிசோடில் ஆயிஷா வெளியேற உள்ளார். ஆகையால் விரைவில் அவரது சம்பளமும் வெளியாக உள்ளது.

Also Read : விவாகரத்து செய்ததை மறைத்த 4 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முத்தி போன வயதிலும் பிளே பாயாக இருந்த ராபர்ட் மாஸ்டர்

Trending News