வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷிகா சத்யா வாங்கிய சம்பளம்.. சோளக்காட்டு பொம்மைக்கு இவ்வளவு லட்சமா?

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 70 நாட்களை தாண்டி 11வது வாரத்திற்கு வந்திருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் தலைமை பொறுப்பை விஷால் ஏற்றுக் கொண்டார். சமீப நாட்களாக விஷால் விளையாடிய விளையாட்டை பார்த்து வெறுத்துப் போன மக்கள் கம்மியான ஓட்டுகளை கொடுத்து வந்தார்கள்.

ஆனால் நேற்று தர்ஷிகா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இனி இருக்கும் மீதமுள்ள நாட்களில் ஆவது விஷால் அவருடைய விளையாட்டை விளையாடியாக வேண்டும். ஏனென்றால் தர்ஷிகாவுடன் சேர்ந்து விஷால் அடித்த லூட்டி தான் தர்ஷிகா வெளியே போவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது.

அந்த வகையில் தற்போது தனியாக விளையாடும் விஷால் அவருடைய கேமை மாற்றி வெற்றியை நோக்கி பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இடையில் இன்னும் கம்மியான நாட்கள் மட்டும் இருப்பதால் 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதால் தொடர்ந்து இரண்டு வாரமாக டபுள் எவிக்ஷன் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சத்யா, தர்ஷிகா வெளியேறியிருக்கிறார்கள். தற்போது இவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதில் முக்கியமாக சத்தியா பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆரம்பத்திலேயே இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செட் ஆக மாட்டார் என்று முத்திரை குத்தி ஆச்சு.

அதற்கு காரணம் இவர் ஒரு சோளக்காட்டு பொம்மையாக தான் அந்த வீட்டிற்குள் இருந்து வேடிக்கை பார்த்து வந்தார். ஆனாலும் ஒவ்வொரு வாரமும் அதிர்ஷ்டவசமாக தப்பிய நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று நீங்கள் விளையாடியது போதும் வீட்டை விட்டு வெளியேறி வாருங்கள் என்று பிக் பாஸ் அவரை வெளியே அனுப்பி விட்டது.

அப்படி 70 நாட்களாக உள்ளே இருந்து வேடிக்கை பார்த்து இருந்தாலும் அவர் வாங்கிய சம்பளம் என்னமோ லட்சக்கணக்கில். அதாவது ஒரு நாளைக்கு சத்யாவுக்கு 20000 ரூபாய். அந்த வகையில் 70 நாட்கள் விளையாடுவதற்காக மொத்தம் 14 லட்ச ரூபாய் சம்பளத்தை பெற்றிருக்கிறார்.

இவருக்கு அடுத்ததாக விஷாலுடன் சேர்ந்து காதல் விளையாட்டு விளையாடி வந்த தர்ஷிகாவிற்கு ஒரு நாளைக்கு 15,000 சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

Trending News