வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லால் சலாம் படத்திற்கு சூப்பர் ஸ்டார் வாங்கிய சம்பளம்.. கெஸ்ட் ரோலுக்கு இத்தனை கோடியா!

அண்ணாத்த படத்திற்குப் பிறகு ரஜினி தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்தப் படத்தில் ரஜினி சிறை துறை உயர் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேலுடன் இணைவார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தில் இவர் வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி பலரையும் வாயைப் பிளக்க வைத்திருக்கிறது.

Also Read: ஆரம்பிக்கும் முன்பே ஏற்பட்ட மோதல்.. கேரியருக்காக 30 வருட நட்பை உடைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா 2012 ஆம் ஆண்டு தனுஷின் 3 படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி, அதன் பின் சூதாட்டத்தை மையமாக வைத்து கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இதன்பின் 8 வருடங்களாக சினிமாவில் இருந்து விலகிய ஐஸ்வர்யா இப்போது மீண்டும் இயக்குனராக லால் சலாம் படத்தை இயக்குவதன் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிறது. நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ள இந்தப் படத்தின் பூஜை கடந்த நவம்பர் மாதம் போடப்பட்டது.

Also Read: கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்த 5 படங்கள்.. லால் சலாம் படத்தில் நடிக்க போவதன் காரணம்?

அதன் பின் விரைவில் படப்பிடிப்பு துவங்கப்படுவதற்காக ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி 7 நாள் கால்சீட் கொடுத்துள்ளார். அதற்காக அவருக்கு 25 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. அப்படி என்றால் ஒரு நாள் சம்பளமாக ரஜினிக்கு 4 கோடி வரை தர இருக்கிறார்கள்.

இந்தியாவில் கெஸ்ட் ரோலில் நடித்து இவ்வளவு சம்பளம் வாங்கிய முதல் நடிகர் ரஜினி மட்டுமே என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு அடுத்து லைக்கா நிறுவனத்திடம் மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரஜினி மகளுடன் சண்டையா?. லால் சலாம் படத்திலிருந்து விலகிய முக்கிய பிரபலம்

Trending News