Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

“அதே கானா.. அதே உப்புக்காத்து..” 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி! ‘மேயாத மான் 2’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“அதே கானா.. அதே உப்புக்காத்து..” 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி! ‘மேயாத மான் 2’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் காதல், நகைச்சுவை மற்றும் இசை என அனைத்தையும் கலந்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்த படங்களில் ஒன்று ‘மேயாத மான்’. கடந்த 2017ஆம் ஆண்டு இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் வைபவ், பிரியா பவானி சங்கர், இந்துஜா மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.குறிப்பாக,படத்தின் பாடல்களும் கதைக்களமும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.‘மேயாத மான் 2’ என்ற பெயரில் உருவாகவுள்ள இந்தப் படத்தை முதல் பாகத்தை இயக்கிய ரத்னகுமாரே இயக்குகிறார். மேலும், முதல் பாகத்தில் நடித்த வைபவ்,பிரியா பவானி சங்கர், இந்துஜா மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்ட அதே நட்சத்திரக் கூட்டணி மீண்டும் ஒன்றிணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை இயக்குநர் ரத்னகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,”அதே கானா..அதே உப்புக்காத்து..அதே அந்தக் காதல்!!”என்று குறிப்பிட்டுள்ள அவர், ‘மேயாத மான்’படத்தின் இரண்டாம் பாகத்திற்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்த ரசிகர்களின் விருப்பத்திற்கு தற்போது பதிலளித்துள்ளார்.

இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.முதல் பாகத்தின் வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

முதல் பாகத்தில் ரசிகர்களைக் கவர்ந்த அதே காதல், இசை மற்றும் நகைச்சுவை அம்சங்கள் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.